×

அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் இல்லை!: புதுச்சேரியில் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை…ஆளும் கட்சியே நடத்துவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு.!!

புதுச்சேரி: புதுச்சேரியில் அரசின் திட்டங்களுக்கு கிரண்பேடி ஒப்புதல் அளிக்காமல் இருப்பதாக கூறி ஆளுநர் மாளிகையை ஆளுங்கட்சியினர் நாளை முற்றுகையிடவுள்ளனர். இதையொட்டி ஆளுநர் மாளிகை முன் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. புதுச்சேரியில் யார் பெரியவர் என்பது தொடர்பாக ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி இடையே மோதல் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கும் மேல் இந்த மோதல் போக்கு தொடர்கிறது. புதுச்சேரி அரசு சார்பில் மக்களுக்கு எவ்விதமான திட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு ஆளுநர் கிரண்பேடி தொடர் மறுப்பு தெரிவித்து வருகிறார். நான்கரை வருடங்களாக புதுச்சேரியில் எந்தவித திட்டங்களும் செயல்படுத்தவில்லை. இதனால் மாநில வளர்ச்சி முற்றிலுமாக சீரழிந்துவிட்டது. இதற்கு காரணம் ஆளுநர் கிரண்பேடி. எனவே கிரண்பேடியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். இந்த போராட்டத்தில் நாராயணசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் பலர் பங்கேற்கவுள்ளனர். ஆளுநர் மாளிகையை ஆளுங்கட்சியினர் முற்றுகையிட முயல்வதால் பல்வேறு பிரச்சனைகள் எழும். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக துணை ராணுவம், புதுச்சேரி போலீசார், இந்தியன் ரிசர்வ் போலீசார் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தற்போது அவர்கள் புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி புதுச்சேரியில் முக்கிய இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா தளங்கள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரி நகரம் முழுவதும் மூடி சீல் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. போலீசார் அனுமதி மறுத்தும் நாளை ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடைபெறும் என முதல்வரும், காங்கிரஸாரும் தெரிவித்திருப்பதால் புதுச்சேரியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. …

The post அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் இல்லை!: புதுச்சேரியில் நாளை ஆளுநர் மாளிகை முற்றுகை…ஆளும் கட்சியே நடத்துவதால் மூன்றடுக்கு பாதுகாப்பு.!! appeared first on Dinakaran.

Tags : Governor House ,Puducherry ,Governor's House ,Kiranbadi ,Sizeh ,Governing Party ,Dinakaran ,
× RELATED ஆளுநர் விருதுகள் 2024: யாரெல்லாம்...