×

முககவசம் அணிந்தால் மட்டுமே மாநகர பேருந்தில் அனுமதி: பிஎம்டிசி முடிவு

பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் முககவசம் அணியாதவர்களை பேருந்தில் ஏற்றக்கூடாது என பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் (பிஎம்டிசி) முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு பரவத்தொடங்கிய கொரோனா தொற்று இடையில் சிறிது காலம், வீரியம் குறைந்து காணப்பட்டதால் பொதுமக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை வாழ தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவத்தொடங்கியுள்ளது. இதனை கட்டுப்படுத்த அரசு தரப்பில் அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விதிக்கப்பட்டுள்ளது.மீண்டும் மார்ஷல்கள் கடுமையாக தனது கடமைகளில் ஈடுபட உள்ளனர். முககவசம் அணியாமல் செல்பவர்களிடம் இருந்து அபராதம் வசூலிக்கப்படும். கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும். தொடர்ந்து, கூட்டமாக இருப்பதை தவிர்ப்பது நல்லது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.தொற்று பரவல் இருப்பினும் ஊரடங்கு அமல்படுத்தப்படாது என முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.  இதன்காரணமாக இதர கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தீவிரமாக கண்காணிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் முககவசம் இல்லாமல் வரும் பயணிகள் பேருந்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அனைத்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து பொதுமக்களும் கட்டாயம் பேருந்தில் பயணிக்கும் போது முககவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்….

The post முககவசம் அணிந்தால் மட்டுமே மாநகர பேருந்தில் அனுமதி: பிஎம்டிசி முடிவு appeared first on Dinakaran.

Tags : BMTC ,Bengaluru ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்