×

சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து: 17 பேர் உயிரிழப்பு.! 22 பேர் படுகாயம்

பெய்ஜிங்: பனிமூட்டம் அதிக அளவில் உள்ளதால் வேகத்தைக் குறைத்து, கவனமாக ஓட்ட போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கினர். கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் இன்று நடந்த சாலை விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சாலைது விபத்து நன்சாங் கவுண்டியில் அதிகாலை 1 மணிக்கு நடந்ததாக தெரியவந்துள்ளது. இந்தச் செய்தி வெளிவந்து சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, நஞ்சாங் மாவட்டப் போக்குவரத்துக் காவல் துறையினர், விபத்து நடந்த பகுதியில் ‘மூடுபனி வானிலை’ நிலவுவதாகக் கூறி ஓட்டுநர்களுக்கு அறிவுரை வழங்கினர். பனிமூட்டம் அதிக அளவில் உள்ளதால், இது போக்குவரத்து விபத்துக்களை எளிதில் ஏற்படுத்தும் என்றும், வேகத்தைக் குறைத்து, கவனமாக ஓட்டவும் என்றும், வாகனங்களை முந்திச் செல்ல வேண்டாம் கூறப்பட்டுள்ளது. சீனாவில் கடுமையான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் இல்லாததால் சாலை விபத்துகள் தொடர்கதையாகி வருகிறது….

The post சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் பனிமூட்டம் காரணமாக சாலை விபத்து: 17 பேர் உயிரிழப்பு.! 22 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : accident due ,China's Jiangxi Province ,BEIJING ,East China ,Dinakaran ,
× RELATED உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு...