×

ஜல்லிக்கட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக் கட்டுப்போட்டிகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு துறையின் முதன்மைச் செயலாளர் கார்த்திக் வெளியிட்டுள்ள அரசாணை: தனி நபரோ அல்லது ஒரு அமைப்போ குறிப்பிட்ட இடத்தில் ஜல்லிக் கட்டு போட்டியை நடந்த விரும்பினால் அந்த போட்டி குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம்  எழுத்துப் பூர்வமாக மனு கொடுத்து முன் அனுமதி பெற வேண்டும். அந்த மனுவில் போட்டி குறித்த தன்மை மற்றும் வகைகள் குறித்து குறிப்பிட வேண்டும். வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். போட்டியில் பங்கேற்கும் காளைகளை துன்புறுத்தபடாமல் இருப்பது குறித்து உறுதி செய்ய வேண்டும். மேலும் பாதுகாப்பு அம்சங்கள் கடைபிடிக்க வேண்டும். இந்த ஜல்லிக் கட்டு போட்டிகள் அனைத்தும் 2017 மிருகவதை சட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விதிகளை பின்பற்றி நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும். வருவாய்த்துறை, கால்நடை, போலீஸ், சுகாதாரம் ஆகியோர் கொண்ட குழுவை மாவட்ட ஆட்சியர்கள் உருவாக்க வேண்டும்.  போட்டிகள் நடக்கும் போது அனைத்துநிகழ்வுகளும் வீடியோ மூலம் படம் பிடிக்க வேண்டும். போட்டிகள் தொடங்குவதற்கு முன்னதாக காளைகளுக்கு  போதைப்பொருள் அல்லது எரிச்சலூட்டும் ஏதாவது பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என்பதையும், காளைகளின் உடல்நிலை எப்படிஉள்ளது என்றும், காளைகள் நோயின்றி உள்ளனவா என்றும்,  கால்நடை மருத்துவர்களை கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஜல்லிக் கட்டு போட்டி திறந்த மைதாங்களில் தான் நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளுடன் இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அந்த இருவரும் கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி மஞ்சு விரட்டு போட்டிகளில் அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அல்லது மொத்த இருக்கையில் பாதியளவு மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.  போட்டிகளில் காளைகளை பிடிக்க  வரும் நபர்கள்  போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இரண்டு டோஸ் தடுப்பூசி மற்றும் சான்று  வைத்திருக்க வேண்டும். பார்வையாளர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி சான்று வைத்திருக்க வேண்டும்.  மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்களுக்கு ஜல்லிகட்டு போட்டிகள் நடத்த அனுமதி இல்லை.  இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ஜல்லிக்கட்டு நடத்த வழிகாட்டு நெறிமுறை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Government of Tamil Nadu ,Tamil Nadu ,Chief Secretary ,Department of Animal Care ,Dinakaran ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...