×

ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் எதிரொலிகக்கநல்லா சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம்,தெப்பகாடு பகுதியில் காட்டு பன்றிகள் அதிகளவு இறந்தது தெரிய வந்தது. அவற்றின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டதில் ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. தமிழக கால்நடை பராமரிப்பு துறையின் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு மருத்துவ குழுவினர் முதுமலையில் முகாமிட்டு ஆய்விற்காக இறந்த காட்டு பன்றிகளின் உடல் பாகங்களை சேகரித்து சென்றனர். நோய் பரவலை தடுக்கும் வண்ணம் அவற்றின் உடல்கள் எரியூட்டப்பட்்டு வருகிறது. இதனிடையே பந்திப்பூர் புலிகள் காப்பகத்திலும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கர்நாடகாவில் இருந்து நீலகிரி மாவட்ட எல்லையான கக்கநல்லா சோதனை சாவடி வழியாக வரும் அனைத்து வாகனங்களுக்கு நீலகிரி மாவட்ட கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கபட்டு வருகிறது. இப்பணிகளை கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங் தலைமையில் கூடலூர் ஆர்டிஓ., முகமது குதுரத்துல்லா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் அருகே தொரப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் பன்றி வளர்ப்பு பண்ணையில் ஆய்வு செய்து, அங்கு வளர்க்கப்படும் பன்றிகளுக்கு ஏதேனும் நோய் பாதிப்பு உள்ளதா என கேட்டறிந்தனர். கால்நடை மருத்துவ குழுவினர் பன்றி வளர்ப்பு உரிமையாளர்களிடம் உயிரி பாதுகாப்பு முறைகளான பண்ணையை சுற்றிலும் வேலி அமைத்து காட்டு பன்றிகள் ஏதும் பண்ணையில் நுழையாத வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் பண்ணையை சுற்றிலும் சோடியம் ஹைப்போ குளோரைட் அல்லது கால்சியம் ஹைப்போ குளோரைட் (பிளிச்சிங் பவுடர்) காஷ்டிக் சோடா தெளிக்க உத்தரவிட்டனர்….

The post ஆப்பிரிக்கன் பன்றிக்காய்ச்சல் எதிரொலிகக்கநல்லா சோதனை சாவடி வழியாக வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு appeared first on Dinakaran.

Tags : Mudumalai Tigers Archive ,Nilgiris District ,Deepkadu ,Dinakaran ,
× RELATED காலநிலை மாற்றத்தால் நோய் தாக்காமல்...