×

மூலப்பொருள் விலை ஏற்றம் எதிரொலி!: தீப்பெட்டி ஆலைகள் 10 நாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..!!

தூத்துக்குடி: தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை ஏற்றத்தை கண்டித்து தமிழகத்தில் வருகின்ற 22ம் தேதி முதல் 31ம் தேதி வரை சுமார் 3,000 சிறு, குறு தீப்பெட்டி தொழிற்சாலைகள் 10 நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் – கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் – சிவகாசி, சாத்தூர், நெல்லை, வேலூர் மற்றும் தருமபுரி பகுதிகளில் சுமார் 3,000 சிறு, குறு தீப்பெட்டி தொழிற்சாலைகள் உள்ளன. சமீபத்திய மூலப்பொருள் விலையேற்றத்தின் காரணமாகவும், டீசல் மற்றும் பெட்ரோல் விலையேற்றத்தால் லாரி வாடகையும் உயர்ந்து தீப்பெட்டி தொழிற்சாலைகளை நடத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் மார்ச் 22 முதல் 31ம் தேதி வரை 10 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்துவதாக கோவில்பட்டி நேஷனல் சிறு, குறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் சுமார் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கவும், மூலப்பொருட்களின் விலை உயர்வை கட்டுக்குள் வைக்கவும் வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தால் மக்களின் இருளை போக்கும் தீப்பெட்டி தொழிலை செய்து வரும் தொழிலாளர்களின் வாழ்க்கை இருளில் மூழ்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. …

The post மூலப்பொருள் விலை ஏற்றம் எதிரொலி!: தீப்பெட்டி ஆலைகள் 10 நாள் வேலைநிறுத்தம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Tamil Nadu ,matchbox ,Dinakaran ,
× RELATED கோவில்பட்டியில் விமான பயிற்சி...