×

குப்பையிலிருந்து உரம் தயாரிப்பதில் திருப்பதி நகரம் மாநிலத்திற்கே முன்னுதாரணமாக உள்ளது

திருப்பதி :  திருப்பதி மாநகராட்சி ஆணையாளர் கிரிஷா தூக்கி வாக்கம் குப்பை சேகரிக்கும் மையத்தில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரங்களை நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்திலேயே குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் முறையில் திருப்பதி முன் உதாரணமாக உள்ளது. நகரில் உள்ள வீடுகளில் இருந்து குப்பைகளை ஊழியர்கள் தனித்தனியாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து அதை சேகரிக்கும் மையத்தில் இருந்து தூக்கி வாக்கம் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து குப்பைகளை இயந்திரங்கள் மூலமாக உரமாக தயாரித்து அவற்றை விவசாயிகளுக்கும். மாநகராட்சி பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தபடுகிறது. திருப்பதி மேம்பால பணிகள் விரைந்து நடைபெறுகிறது. ராமானுஜர் ஜங்சன் பகுதியில் மின்சார கேபிள்கள் இடையூறாக உள்ளதால் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்றார். இதில் மாநகராட்சி துணை ஆணையாளர் சந்திரமவுலீஸ்வரர் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்….

The post குப்பையிலிருந்து உரம் தயாரிப்பதில் திருப்பதி நகரம் மாநிலத்திற்கே முன்னுதாரணமாக உள்ளது appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirupati Municipal Corporation ,Commissioner ,Krisha Vakkam ,Garbage Collection Center ,
× RELATED திருப்பதி மலைப்பாதையில் வேருடன் சாய்ந்த மரம்