×

கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை உபரி நீர் கால்வாய் பணி: எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன் ஆய்வு

ெசன்னை: தேர்வாய் கண்ணன் கோட்டை நீர்த்தேக்கத்திலிருந்து வெளியேறும் உபரிநீர் செல்லும் கால்வாய் நிலுவையில் உள்ள பணிகள் மற்றும் சாலை பணிகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே.கோவிந்தராஜன் ஆய்வுசெய்தார்.  திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை ஆகிய இரு ஏரிகளை இணைத்து, ‘கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்’ என்ற புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் பணியை கடந்த 2013-ம் ஆண்டு செப். 11-ம் தேதி தொடங்கியது. 1,485.16 ஏக்கர் நிலத்தில் ரூ.380 கோடி மதிப்பிலான கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம், முடிவடைந்து 2020 நவம்பர் மாதம் 21ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் காணொலி காட்சி மூலம் மக்கள் பயன்பாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது.இதனையடுத்து  கரடிபுத்தூர் ஏரியில் இருந்து கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கத்தில் நீர் அதிகரிக்கும்போது உபரி நீர் வெளியே செல்ல 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வடப்பு  பெரிய ஏரிக்கு உபரிநீர் செல்வதற்கு 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாய் அமைக்கப்பட்டது. இந்த உபரி நீர் செல்லும் கால்வாய் அருகாமையில்  சுமார் 500.க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களில் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த கால்வாய் ஒருபுறம் மட்டும் கான்கிரீட் சுவர் அமைக்கப்பட்டு உள்ளது.  மறுபகுதியில் சுவர் இல்லாததால் வெளியேறும் உபரி நீரானது விலை நிலங்களுக்குள் சென்று பயிர் சேதமடைகிறது. இந்த கால்வாய் பணிகளை சில இடங்களில் தடைபட்டு நிற்கிறது. இந்த கால்வாய் பணிகளை சீரமைத்து உபரி நீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று கண்ணன்கோட்டை தேர்வாய் கிராம மக்கள் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே. கோவிந்தராஜனிடம் கோரிக்கை வைத்தனர். விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கால்வாய் பணிகளையும் மதகு பணிகளையும் ஆங்காங்கு பாதிக்கப்பட்டுள்ள சாலை பணிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறுகையில் இந்தப் பணிகளை குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் துறைசார்ந்த அமைச்சர்களை சந்தித்து எடுத்துக்கூறி விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பி.ஜே. மூர்த்தி, மணிபாலன், தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம், உதவி செயற்பொறியாளர் ஜெய்சங்கர், இளநிலைப்பொறியாளர் பத்மநாபன், தேர்வாய் ஊராட்சி தலைவர் முனிவேல், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் லோகேஷ், ஒன்றிய கவுன்சிலர் கலா உமாபதி, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் உடன் இருந்தனர். …

The post கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை உபரி நீர் கால்வாய் பணி: எம்.எல்.ஏ டி.ஜே.கோவிந்தராஜன் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Kannan Fort ,MLA ,DJ Govindarajan ,Channai ,Kannan Kot Reservoir ,Kannan… ,Kannan Kot ,Kannan Kot Kai ,TJ Govindarajan ,Dinakaran ,
× RELATED எம்எல்ஏக்கள் டி.ஜெ.கோவிந்தராஜன்,...