×

திமுக எம்.பி கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து..!

சென்னை: திமுக எம்.பி கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி இன்று தனது 55-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். துணை பொது செயலாளராக அவர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் கனிமொழியின் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக பல இடங்களில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் உள்ளிட்ட செயல்களை செய்து தங்கள் பலத்தை காட்ட கனிமொழியின் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்;  ‘எழுத்தாளர், மக்கள் சேவகர், திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சகோதரி திருமதி கனிமொழி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.’ என குறிப்பிட்டுள்ளார்….

The post திமுக எம்.பி கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து..! appeared first on Dinakaran.

Tags : Dijagam M. ,Tamil Nadu ,BJP ,Anamalai ,M. ,Tamil ,Nadu ,Raja Leader ,B Kanilingali ,Dijagam ,KINANLANGUANG ,Kasar M. ,BJP Leader ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...