×

சொந்த ஸ்டேடியத்தில் சதம் விளாசிய அபிமன்யு!

உத்தரகாண்ட் அணியுடன் டேராடூன், அபிமன்யு கிரிக்கெட் அகடமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய ரஞ்சி கோப்பை எலைட் இ பிரிவு லீக் ஆட்டத்தில், பெங்கால் அணி தொடக்க வீரர் அபிமன்யு ஈஸ்வரன் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். அபிமன்யு பிறப்பதற்கு முன்பாகவே அவரது தந்தையால் கட்டப்பட்டது இந்த ஸ்டேடியம் என்பது குறிப்பிடத்தக்கது. தனது பெயரிலான ஸ்டேடியத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையும் அபிமன்யுவுக்கு கிடைத்துள்ளது. டாஸ் வென்ற உத்தரகாண்ட் முதலில் பந்துவீச, பெங்கால் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்துள்ளது. சயான் மொண்டல் 18, சுதிப் குமார் 90 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அபிமன்யு 141 ரன் (238 பந்து, 12 பவுண்டரி, 1 சிக்சர்), அனுஸ்துப் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். சூப்பர் பார்மில் உள்ள அபிமன்யு கடைசியாக விளையாடிய 5 இன்னிங்சில் 122 (சர்வீசசுக்கு எதிராக), 141 மற்றும் 157 (வங்கதேசம் ஏ அணிக்கு எதிராக), 170 ரன் (நாகாலாந்துக்கு எதிராக), தற்போது உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 141* ரன் விளாசி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது முதல் தர போட்டியில் அவர் அடிக்கும் 20வது சதமாகும்….

The post சொந்த ஸ்டேடியத்தில் சதம் விளாசிய அபிமன்யு! appeared first on Dinakaran.

Tags : Satham Vasya Abimanyu ,Ranchi Cup Elite E Division League ,Abimanyu Cricket Academy Stadium ,Uttarakhand ,Deeradun ,
× RELATED பிளே ஆப் வாய்பை தக்க வைக்க கொல்கத்தாவை வெல்லுமா மும்பை