×

பார்த்தசாரதி கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் 8 மணி நேரம் நின்று பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திய அமைச்சர் சேகர்பாபு: பொதுமக்கள் பாராட்டு

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. அதிகாலை 2.30 மணியளவில் இருந்து மூலவர் தரிசனம் நடந்தது. அதிகாலை 4.15 மணிக்கு பார்த்தசாரதி பெருமாள் உபயநாச்சியார்களுடன் உள்பிரகார புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. பின்னர் காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் பரமபதவாசல் அருகே பார்த்தசாரதி பெருமாள் உபயநாச்சியார்களுடன் நம்மாழ்வாருக்கு காட்சி அளித்தார். அப்போது வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை நிகழ்ச்சி நடந்தது. அததை தொடர்ந்து திருவாய்மொழி மண்டபத்தில் உள்ள புண்ணிய கோடி விமானத்தில் பார்த்தசாரதி பெருமாள் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது கோயிந்தா.. கோயிந்தா… என பக்தர்கள் பக்தி கோஷங்களை எழுப்பினர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை பார்ப்பதற்காக முதல் நாள் நள்ளிரவு இருந்தே பொதுமக்கள் கோயிலுக்கு திரள தொடங்கினர். பல மணி நேரம் காத்திருந்து சொர்க்கவாசல் நிகழ்ச்சியை பார்த்தனர். நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதால், 4 மாட வீதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அமைச்சர் பி.கே.சேகர்பாபு மாலை 6 மணியளவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலுக்கு வந்தார். அப்போது பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை பார்த்து, இந்த கூட்டம் எவ்வளவு தூரம் உள்ள என்று 4 மாட வீதிகளிலும் நடந்து சென்று பார்வையிட்டார். ஆயிரக்கணக்கணகானோர் கால்கடுக்க நிற்பதை பார்த்து, உடனடியாக களத்தில் இறங்கிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு மக்களோடு மக்களாக நின்று கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் இறங்கினார். முதலில் முதியோர், கைக்குழந்தைகளுடன் நின்று கொண்டிருந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகளை விரைவாக செல்ல ஏற்பாடு செய்தார். தொடர்ந்து மக்களை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டார். பொதுமக்கள் எந்தவித சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகளை அமைச்சர் சேகர்பாபு ஏற்படுத்தி கொடுத்தார். கொஞ்சம் கூட ஓய்வு எடுக்காமல் சுமார் 8 மணி நேரம் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நின்று கொண்டு கூட்டத்தை ஒழுங்குப்படுத்தி அனைவரும் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தார். கடைசி பக்தரும் சாமி தரிசனை செய்யும் வரை அவர் அங்கிருந்து பணிகளை முடுக்கி விட்டார். பக்தர்கள் தரிசனம் முடிந்த பின்னரே கடைசியில் அவர் சாமி தரிசனம் செய்தார். அமைச்சரின் இந்த செயலை பார்த்து பக்தர்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். அதே நேரத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கால் கடுக்க பல நேரத்திற்கு மேலாக நின்று பக்தர்களை ஒழுங்குப்படுத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அமைச்சர் பி.கே.சேகர்பாபுவின் செயலை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். மேலும் ஏராளமான பொதுமக்கள் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர்….

The post பார்த்தசாரதி கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் 8 மணி நேரம் நின்று பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்திய அமைச்சர் சேகர்பாபு: பொதுமக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Minister ,Shekharbabu ,Parthasarathy temple ,CHENNAI ,Heaven Gate ,Tiruvallikeni Parthasarathi Temple ,Vaikunda Ekadasi ,
× RELATED திருவல்லிக்கேணி பார்த்தசாரதி...