×

தாய், மகன் சரமாரி வெட்டிக் கொலை: விவசாயி வெறிச்செயல்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணாபுரம் அருகே ஒன்னியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மனைவி பழனியம்மாள்(73). இவரது மகன் ராஜமாணிக்கம் (55), விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் நெல் பயிரிட்டுள்ளார். அதே ஊரை சேர்ந்தவர் பெரியசாமி (63). குடும்ப பிரச்னை காரணமாக இவரது மனைவி 2 மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். அவருடன் ஒரு மகன் வசிக்கிறார். ராஜமாணிக்கத்திற்கும், பெரியசாமி குடும்பத்திற்கும் வரப்பு வழித்தடம் தொடர்பான பிரச்னை உள்ளது. இந்நிலையில் நேற்று, ராஜமாணிக்கம், தாயாருடன் வயலில் நெல் அறுவடை செய்து கொண்டிருந்தார். பக்கத்து நிலத்தில், பெரியசாமி கீரை அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்குள் வழித்தடம் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. ஆத்திரம் அடைந்த பெரியசாமி, தான் வைத்திருந்த அரிவாளால், பழனியம்மாளை வெட்டினார். அதை தடுக்க வந்த ராஜமாணிக்கத்திற்கும் வெட்டு விழுந்தது. இதில் ரத்தவெள்ளத்தில் இருவரும் மயங்கி விழுந்தனர். மருத்துவமனையில் பரிசோதித்த டாக்டர், இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். போலீசார், வழக்கு பதிந்து பெரியசாமியை தேடி வருகின்றனர்….

The post தாய், மகன் சரமாரி வெட்டிக் கொலை: விவசாயி வெறிச்செயல் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Chinnaswamy ,Palaniammal ,Onniambatti ,Krishnapuram, Dharmapuri district ,Rajamanickam ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு