×

பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மஞ்சள்

தோகைமலை: கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளில் மஞ்சள் சாகுபடி செய்த விவசாயிகள் தை திருநாள் விற்பனைக்கு எதிர்பார்த்து உள்ளனர்.கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளிள் மஞ்சள் சாகுபடியை பரவலாக செய்து வருகின்றனர். வருகின்ற தை மாத பொங்கல் பண்டிகைக்காக விவசாயிகள் தயார் படுத்தி வருகின்றனர்.ஈரோடு, சிவகிரி, சத்தியமங்கலம் உள்பட மேற்கு மாவட்ட பகுதியிள் மஞ்சள் சாகுபடிக்கு உகந்த நிலங்கள் அமைந்துள்ள தால் அந்த பகுதிகளிள் மஞ்சள் சாகுபடிகளுக்கு விவசாயிகள் முக்கியத்துவம் அளித்து சாகுபடி செய்து வருகின்றனர். மருத்துவம், வாசனை திரவியங்கள் உள்பட பள்வேறு முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்தும் மஞ்சளுக்கு உலகம் முழுவதும் தமிழகத்தின் மஞ்சளுக்கு சிறப்பான பெயர் உள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் தற்போது கடவூர் மற்றும் தோகைமலை சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிவகிரியில் உள்ள ஒரு தனியார் கடையில் மஞ்சள் சாகுபடிக்கான விதை மஞ்சள்கிழங்கு ஒரு கிலோ ரூ.25 முதல் ரூ.50 வரை விலைக்கு பெற்று நடவு செய்து உள்ளனர். ஆடி மாதம் மஞ்சள் சாகுபடிக்கு நல்ல பருவம் என்றும், நடவு செய்து 15 அல்லது 20 நாட்கள் வரை 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சினால் மஞ்சள் பயிர் முளைத்து வெளியில் வரத்தொடங்கிவிடும் என்றும் கூறுகின்றனர். பயிர் வெளியில் வந்த பிறகு வாரம் ஒருமுறை மட்டுமே தண்ணீர் பாய்ச்சினால் போதும் என்றும் தெரிவிக்கின்றனர். மேலும் அதிக மகசூல் கிடைக்க நடவு செய்தது முதல் 30 வது மற்றும் அடுத்த 30வது நாளில் யூரியா, பார்ட்டம்பாஸ் உரமும், 3 வது முறையாக யூரியா, பொட்டாஸ், சல்பேட், டிஏபி, குருணை மருந்து போன்ற உரங்களை பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர். இலை சுருட்டு போன்ற நோய்களுக்கு மஞ்சள் செடியின் இலையை பறித்து தனியார் மருந்து கடைகளிள் காண்பித்தால் அதற்கான மருந்து பெற்று மஞ்சள் செடிகளுக்கு மருந்து தெளிப்பதாகவும் கூறுகின்றனர். மஞ்சளின் விளைச்சல் நடவு செய்து 9 வது மாதத்தில் முதிர்ச்சி அடையும், அதன் பிறகு அறுவடை செய்யும் மஞ்சள் மருத்துவம் உள்பட வாசனை திரவியங்களுக்காக வியாபாரிகள் வாங்கிச் செல்வதாக தெரிவிக்கின்றனர்.ஆனால் நடவு செய்து 6 வது மாதத்திள் அறுவடை செய்யும் மஞ்சள் கொத்துகள் தை மாதத்தில் பொங்கல் பண்டிகைக்காக பயன்படுத்தப் படுகிறது என்று விவசாயிகள் கூறுகின்றனர். ஈரோடு மற்றும் சிவகிரியில் மஞ்சள் சாகுபடி செய்யும் விவசாயிகளிடம் ஆலோசனைகள் பெற்று கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளிள் மஞ்சள் சாகுபடியை தொடங்கிய விவசாயிகள் தற்போது விற்பனைக்கான முயற்சியில்ஈடுபட்டு வருகின்றனர். தற்போது நடவு செய்து 6 மாதங்கள் முடிய உள்ளதால் வருகின்ற தை மாத பொங்கலுக்கு மஞ்சள் கொத்தாக விற்பனை செய்ய தயாராகி வருகின்றனர். கடவூர் மற்றும் தோகைமலை பகுதி பொதுமக்கள் வெளி மாவட்டங்களிள் பெற்று வந்த மஞ்சள், தற்போது கடவூர் மற்றும் தோகைமலை பகுதிகளிள் உற்பத்தியான மஞ்சளுக்கு வரவேற்பு கிடைக்குமா என்று எதிர்பார்த்து உள்ளனர்….

The post பொங்கல் பண்டிகைக்கு தயாராகும் மஞ்சள் appeared first on Dinakaran.

Tags : Pongal ,Doghaimalai ,Kadavur ,Tai Tirva ,Karur District ,Pongal Festival ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...