×

பொதுநூலகத்துறை சார்பில் ஜனவரி மாதம் 6,7, 8 ஆகிய 3 நாட்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் இலக்கியத்திருவிழா.!

சென்னை: பொதுநூலகத்துறை சார்பில் 2023, ஜனவரி மாதம் 6,7 & 8 ஆகிய மூன்று நாட்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் இலக்கியத்திருவிழா நடைபெற உள்ளது. இதனையொட்டி, பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்படும் புது ஊஞ்சல், தேன்சிட்டு மற்றும் கனவு ஆசிரியர் ஆகிய இதழ்களில் அரசுப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தும் வகையில் கதை. கவிதை/பாடல், கட்டுரை. ஓவியம்/சிற்பம், ஓரிகாமி போன்ற தலைப்புகளில் ஆர்வமுடைய அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சிப் பட்டறை மேற்குறிப்பிட்ட இலக்கியத் திருவிழாவுடன் இணைந்து நடைபெறவுள்ளது.இதனைச் சார்ந்து, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய 13 மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியரில் கதை சொல்லுதல், கதை எழுதுதல், கட்டுரை எழுதுதல், கவிதை/பாடல் புனைதல், ஓவியம் வரைதல்/களிமண் சிற்பம் உருவாக்குதல் மற்றும் ஓரிகாமி செய்தல் போன்ற படைப்பாற்றலும் ஆக்கத்திறனும் கொண்டிருக்கும் 10 மாணவர்களை (ஒரு மாவட்டத்திற்கு) 2023, ஜனவரி 6, 7 & 8 ஆகிய நாட்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் வெளியிடப்படும் சிறார் மற்றும் ஆசிரியர் இதழ்களுக்கான பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ள அறிவுறுத்துமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்குறிப்பிட்ட நாட்களின் நிகழ்ச்சி நிரல் மற்றும் கருத்தாளர்களின் பெயர்ப்பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது. சார்ந்த 13 மாவட்டங்களில் இருந்து இப்பயிற்சிப்பட்டறைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களின் விவரத்தை கீழ்க்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து tnscertjdss@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 05.01.2023 அன்று மாலை மணிக்குள் அனுப்பி வைக்குமாறும் ஒவ்வொரு நாளும் பயிற்சிக்குத் தொடர்புடைய மாணவர்களை சென்னைக்கு அழைத்துவந்து திரும்ப அழைத்துச்செல்ல ஆசிரியர்களை கல்வி நியமிக்கவும் மாவட்ட அலுவலர்கள் சார்ந்த முதன்மைக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மற்றும் அழைத்துவரும் ஆசிரியர்களுக்கான பயணப்படி அன்றைய தேதியிலேயே வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post பொதுநூலகத்துறை சார்பில் ஜனவரி மாதம் 6,7, 8 ஆகிய 3 நாட்களில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறார் இலக்கியத்திருவிழா.! appeared first on Dinakaran.

Tags : Public Library Department ,Children's Literary Festival ,Anna Centenary Library ,Chennai ,Public Libraries Department ,Dinakaran ,
× RELATED பொது நூலகத்துறையில் நூல் கொள்முதல் செய்ய இணைய தளம் தொடக்கம்