×

முகக்கவசம் அணியாத மக்களுக்கு ரூ.1,000 எம்எல்ஏக்களுக்கு ரூ.500 அபராதம் ஏன்?…குஜராத் சட்டப் பேரவையில் அமளி

காந்திநகர்: முகக்கவசம் அணியாதவர்களுக்கு அளிக்கப்படும் அபராத விஷயத்தில் இரட்டை கொள்கை ஏன்? என்று குஜராத் பேரவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத்தில் கொரோனா தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில் அகமதாபாத், சூரத் போன்ற நகரங்களில் செயல்படும் பூங்காக்கள், ஜிம்கள், கிளப்புகள் மூடப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்றும், முகக் கவசம் அணியாத அமைச்சர்கள், எம்எல்ஏக்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்தது. முகக் கவசம் அணிதல் விஷயத்தில் பொதுமக்களுக்கு ரூ. 1,000 என்றும், எம்பி – எம்எல்ஏக்களுக்கு ரூ. 500 என்றும் அறிவித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  பொது மக்களிடமிருந்து இரட்டை அபராதம் விதிக்கும் முறையை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. இந்த விவகாரம் சட்டசபையில் எதிரொலித்தது. அப்போது பேசிய சட்டமன்ற சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி, ‘கொரோனா தொற்று அதிகமாகிவிட்டதால், சட்டசபை வளாகத்திற்குள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அபராதம் ரூ.500 வசூலிக்கப்படும். சபையில் எழுந்து நின்று பேசும் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் ஆகியோர் சிறிது நேரம் முகக்கவசங்களை கழற்றிவிடலாம். ஆனால் எந்தவொரு அமைச்சரும், எம்எல்ஏவும் முகக்கவசம் இல்லாமல் பொதுவெளியில் சுற்றித் திரிந்தால் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட விதிகள் கண்டிப்பாக பொருந்தும்’ என்றார். 2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை முகக்கவசம் அணியாத நபர்களிடம் இருந்து எத்தனை ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது என்று காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கேள்வி கேட்டார். அதற்கு அரசு தரப்பில், ‘114 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் மட்டும் 5,04,828 பேரிடமிருந்து அதிகபட்சமாக ரூ.30,07,32,840 அபராதம் வசூலிக்கப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது….

The post முகக்கவசம் அணியாத மக்களுக்கு ரூ.1,000 எம்எல்ஏக்களுக்கு ரூ.500 அபராதம் ஏன்?…குஜராத் சட்டப் பேரவையில் அமளி appeared first on Dinakaran.

Tags : Amali ,Gujarat Law Assembly ,Gandinagar ,Gujarat ,Dinakaran ,
× RELATED “நான் பேசும் போது சம்பந்தமில்லாமல்...