×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆங்கில புத்தாண்டு வசூல் ரூ.25 லட்சம்

சென்னை: ஆங்கில புத்தாண்டு அன்று, வண்டலூர் உயிரியில் பூங்காவிற்கு வந்த பார்வையாளர்கள் மூலம் ஒரே நாளில் ரூ.25 லட்சம் வசூலானது. சென்னை அடுத்த வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன. இதனை காண தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், வழக்கத்துக்கு மாறாக புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளிநாடு, வெளி மாநிலங்கள், சென்னை உட்பட தென் மாவட்டங்களில் இருந்தும் ஒரே நாளில் நேற்று 25 ஆயிரம் பேர் குடும்பம் குடும்பமாக திரண்டனர். இதில் யானை, காண்டாமிருகம், ஒட்டகச் சிவிங்கி, நீர்யானை, மனித குரங்கு உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உலவும் இடங்களுக்கு சென்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கண்டுகளித்தனர். பார்வையாளர்கள் மூலம் வண்டலூர் பூங்காவிற்கு ஆங்கில புத்தாண்டு நாளில் ரூ.25 லட்சம் வசூலானதாக கூறப்படுகிறது….

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆங்கில புத்தாண்டு வசூல் ரூ.25 லட்சம் appeared first on Dinakaran.

Tags : English New Year ,Vandalur Zoo ,Chennai ,Vandalur Bio ,English ,Year ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று...