×

பள்ளிக்கு திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கைகள் என்ன? கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை: விரிவான பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள இ.சி.ஆர். சர்வதேச பள்ளியில் மாணவி மரணத்தையடுத்து கடந்த ஜூலை 17ம் தேதி பள்ளி வளாகத்துக்குள் புகுந்த போராட்டக்காரர்கள் பள்ளி உடமைகளை அடித்து நொறுக்கியும், தீ வைத்தும் சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டது. இந்நிலையில் பள்ளி வளாகம் முழுவதும் சீரமைக்கப்பட்டு விட்டதாகவும், அரசு அமைத்த ஆய்வுக் குழு ஆய்வு செய்துள்ளதாகவும் பள்ளியை நிர்வகிக்கும் லதா கல்வி அறக்கட்டளை தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கனியாமூர் பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று பள்ளிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். கள்ளக்குறிச்சி பள்ளியை முழுமையாக திறப்பது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பள்ளிக்கு மீண்டும் திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன என அறிக்கை தாக்கல் செய்ய என கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே நடந்த நிகழ்வு மாணவர்களின் நினைவில் வரும் என்பதால், மனநல ஆலோசனைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அப்போது 9-12ம் வகுப்புக்கு பள்ளி திறக்கப்பட்டு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என பள்ளி நிர்வாகம் சார்பில் பதிலளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போதைய சூழலை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதாக அரசு தரப்பு விளக்கத்தை ஏற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது….

The post பள்ளிக்கு திரும்பும் மாணவர்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கைகள் என்ன? கள்ளக்குறிச்சி பள்ளி நிர்வாகத்திற்கு ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Kolakkuruchi School Administration ,Chennai ,Chennai iCard ,Kallakkurichi ,District ,iCort ,Korakarukei School ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...