×

பெற்றோர்கள் 70% பேர் பள்ளிகளை திறக்க அரசு நடத்திய கருத்தறியும் கூட்டத்தில் கோரிக்கை: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: அரசு நடத்திய கருத்தறியும் கூட்டத்தில் பங்கேற்ற பெற்றோர்கள் 70% பேர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2 நாட்களாக நடந்த கருத்தறியும் கூட்டத்தில் பெற்றோர்கள் கருத்து தெரிவித்தனர். 10, 12-ம் வகுப்புகளை திறக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளதால் பள்ளிகள் திறப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. தற்போது கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் மாணவா்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் நடப்பாண்டில் பொதுத்தோ்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் செங்கோட்டையன் விளக்கம் அளித்து இருந்தார். அதன்படி முதல் கட்டமாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைகளுக்குப் பின் பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது….

The post பெற்றோர்கள் 70% பேர் பள்ளிகளை திறக்க அரசு நடத்திய கருத்தறியும் கூட்டத்தில் கோரிக்கை: பள்ளிக்கல்வித்துறை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Department of Schooling ,School Department ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...