×

அதிமுகவால் எனக்கு ரூ.60 கோடி நஷ்டம்: கொந்தளித்த கமல்ஹாசன்

மாங்கனி மாநகரில் மநீம கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்துச்சு. இதில் பேசிய அதன் தலைவர் கமல்ஹாசன், ரொம்பவும் கோபமாக பேசிக்கிட்டே போனாரு. ஒரு கட்டத்துல, ‘‘எனது சொத்து மதிப்பு ₹176 கோடின்னு வேட்பு மனுவுல சொல்லியிருக்கேன். அதிமுக ஆட்சியில் கொடுத்த தொல்லையால் மதிப்பு  குறைந்துவிட்டது. இல்லை என்றால் ₹200 கோடியை தாண்டியிருப்பேன். எனது தொழிலில், அதிகார திமிரில் எனக்கு ₹60 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டனர். அவர்களை சும்மா விடமாட்டேன். 35 வருடமா வருமான வரி கட்டிகிட்டு வாறேன். இல்லை என்றால் ₹300 கோடியை தாண்டியிருக்கும், வெளியே சொல்லமுடியாமலும் சொத்து இருக்கும். நான் செத்தால் என் உடல் தமிழ் மண்ணுக்குன்னு எழுதி கொடுத்துவிட்டேன். இந்திய நடிகர்களிலேயே முதன்முதலாக உடலை தானமாக கொடுத்தது நான் தான்’’ என கூறிவிட்டு, ‘‘நான் புரியும் படிதானே பேசுகிறேன்’’ என்று தனது முஷ்டியை தூக்கி காட்டினார்….

The post அதிமுகவால் எனக்கு ரூ.60 கோடி நஷ்டம்: கொந்தளித்த கமல்ஹாசன் appeared first on Dinakaran.

Tags : Mughal ,Kamalhasan ,Maniema Party ,Mangani ,
× RELATED அசைவம் சாப்பிடறது முகலாய மனப்போக்கு: மோடி விமர்சனத்தால் சர்ச்சை