×

யுனைட்டட் கோப்பை டென்னிஸ்: ஸ்வியாடெக் வெற்றி

பிரிஸ்பேன்: யுனைட்டட் கோப்பை டென்னிஸ் தொடரில்,  போலந்து அணியின் நட்சத்திர வீராங்கனை இகா ஸ்வியாடெக் வெற்றிக் கணக்கை தொடங்கினார்.ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நேற்று நடந்த பி பிரிவு ஆட்டங்களில் போலந்து- கஜகஸ்தான் அணிகள் மோதின. மகளிர் ஒற்றையர் ஆட்டத்தில்  போலாந்தின்  இகா ஸ்வியாடெக் (21வயது, முதல் ரேங்க்), கஜகஸ்தான் வீராங்கனை  யுலியா புடின்ட்சேவா (51வது ரேங்க், 27 வயது) மோதினர். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த ஸ்வியாடெக் 6-1, 6-3 என்ற நேர் செட்களில்  யுலியாவை வீழ்த்தினார். இப்போட்டி ஒரு மணி, 4 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.அதே சமயம், ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில்  போலந்தின் டேனியல் மிகேஸ்கி (260வது ரேங்க், 22 வயது)  6-7 (5-7), 2-6 என்ற நேர் செட்களில் கஜகஸ்தான் வீரர்  டிமோபய் ஸ்கடோவிடம் (142வது ரேங்க், 21வயது) போராடி தோற்றார். போலந்து – கஜகிஸ்தான் மோதல் 1-1 என டிராவில் முடிந்த நிலையில், பி பிரிவில் சுவிஸ் அணி முதலிடம் வகிக்கிறது. கஜகஸ்தான் 2வது இடத்திலும், போலந்து 3வது இடத்திலும் உள்ளன.டி பிரிவு லீக் சுற்றில் இங்கிலாந்துடன் மோதிய ஸ்பெயின் அணி 0-2 என்ற கணக்கில் தோற்றது. நட்சத்திர வீரர் ரபேல் நடால் 6-3, 3-6, 4-6 என்ற செட் கணக்கில் கேமரான் நோரியிடம் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது. …

The post யுனைட்டட் கோப்பை டென்னிஸ்: ஸ்வியாடெக் வெற்றி appeared first on Dinakaran.

Tags : United Cup Tennis ,Sviatek ,Brisbane ,Poland ,Ika Swiadek ,Australia ,Brisbane… ,Swiadek ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ் முதல் முறையாக ஸ்வியாடெக் சாம்பியன்