×

வேலூர் மாவட்டம் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி: கப்ளிங் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள்

வேலூர்: வேலூர் மாவட்டம் திருவலம் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் பெங்களூரு – சென்னை செல்லும் பயணிகள் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயிலில் பெட்டிகளை இணைக்கக்கூடிய கப்ளிங் உடைந்ததால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கப்ளிங் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஜோலார்பேட்டை-அரக்கோணம் விரைவு ரயிலும் தாமதமானதால் பயணிகள் இறங்கி பேருந்தில் செல்கின்றனர். வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலைய சந்திப்புக்கு அடுத்த உள்ளது திருவலம் ரயில் நிலையம். இந்திலையில் இன்று காலை பெங்களுருவில் இருந்து சென்னை மார்க்கமாக சென்ற சரக்கு ரயிலின் ஒவ்வொரு  பேட்டியும் இணைக்கக்கூடிய கப்ளிங் திருவலம் ரயில் நிலையத்தை தாண்டி செல்லும் போது உடைத்தது.  இதன் காரணமாக காலை முதல் தற்போது வரைக்கும் உடைந்த கப்ளிங்யை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பெங்களுருவில் இருந்து சென்னை   மார்க்கமாக செல்லக்கூடிய ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரயில் உடனடியாக திருவலம் அருகே நிறுத்தபட்டுள்ளது. இந்த ரயில் சேவை பாதிப்பு காரணமாக ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது. ஜோலார்பேட்டையில் இருந்து வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர், காட்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து கல்லூரி, மற்றும் பணிகளுக்கு செல்வோர் ரயில் தாமதம் ஆனதால் தற்போது பேருந்தில் சென்றுள்ளனர். …

The post வேலூர் மாவட்டம் அருகே சரக்கு ரயில் பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி: கப்ளிங் உடைப்பை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Vellore district ,Vellore ,Bengaluru ,Chennai ,Tiruvalam, Vellore district ,Dinakaran ,
× RELATED 9 மையங்களில் நீட் தேர்வை 5,266 மாணவர்கள்...