×

அழையா விருந்தாளியாக தாமரை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இலை கட்சி விஐபி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘தன்னுடைய கட்சி நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கே தொண்டர்கள் வராத நிலையில், தோழமை கட்சி நடத்தும் நிகழ்வுகளுக்கு செல்வது யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘இலைக்கட்சியின்  தலைமை இப்போது சேலம், தேனி, தஞ்சாவூர் என பல்வேறு  பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. இதில் சேலத்துக்காரர் அணியிடம் கட்சியின்  தலைமை அலுவலகம், சின்னம் இருந்தாலும், மறுபுறம் அவற்றை கைப்பற்றியே தீருவேன் என தேனிக்காரர் தீவிரம் காட்டி வருகிறாராம். அதற்கு தாமரை கட்சியின்  தேசிய தலைவர்கள் ஆதரவு தேவை. அவர்கள் நினைத்தால் எப்படியாவது கட்சி சின்னம், ராயப்பேட்டை தலைமை அலுவலகம் தனக்கு கிடைத்துவிடும் என்று நினைக்கிறாராம். எனவே, தாமரை தரப்பினர், எந்த நிகழ்வுக்கும் அழைக்காவிட்டாலும் விருந்தாளி  போல அவ்வப்போது செல்போனில் பேசி உறவு அறுந்துவிடாமல் தொடர்பில் இருந்து வருகிறாராம். ஆனால், சேலம் தரப்போ, தாமரை தலைவர்களை கண்டு கொள்வதில்லையாம். இது தாமரை  கட்சியினருக்கு டென்ஷனை கிளப்பி இருக்காம். தேவைப்பட்டால் தனித்து  நிற்கலாமென்ற வாதமும் தொண்டர்கள் தரப்பில் முன் வைக்கப்படுகிறது. இதை  மனதில் வைத்துத்தான் சேலத்துக்காரர், இலைக்கட்சியின் மூத்த மாஜி மந்திரிகள்  மூலம் தாமரைக்கட்சியை அட்டாக் செய்ய வைத்து, அவ்வப்போது பரபரப்பு தீயை  பற்றவைத்து விடுவதாக தொண்டர்கள் பரபரப்பாக பேசிக்கிறாங்க. இந்த  அணுகுமுறையால் இலைக்கட்சி ஒட்டுதலா இருக்கிறதா இல்லை வெட்டும் விதத்தில்  நடந்து கொள்கிறதா என தாமரைக்கட்சிக்காரங்க குழப்பத்தில் இருக்காங்க. இது  ஒருபுறமிருக்க தேனிக்காரருக்கும், தாமரைக்கட்சியினருக்கும் செக் வைக்கும்  விதமாக, தூங்கா நகரில் ஒரு மிகப்பெரிய விழா நடத்த சேலத்துக்காரர்  திட்டமிட்டுள்ளாராம். இதுதொடர்பான வேலைகள் தற்போது நடந்து வருகிறது. இதில் கூட்டணி குறித்த பொதுவான அறிவிப்பை சேலத்துக்காரர்  வெளியிட வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன..’’ என்றார் விக்கியானந்தா.‘‘அல்வா மாவட்ட மேட்டர் ஏதாவது கையில் இருந்தா சொல்லுங்க கேட்போம்…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ அல்வா மாநகரத்தில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நகை திருட்டு புகார்  வந்ததாம். இந்த திருட்டில் சம்பந்தப்பட்ட அருவா பெயர் கொண்டவர் வேறு ஒரு திருட்டு  வழக்கில் கைதாகி கோவையில் சிறையில் இருந்தாராம். அவரை முறைப்படி விசாரித்து  திருட்டு வழக்கில் க்ரைம் காக்கிகள் கைது செய்தார்களாம். பின்னர் அந்த  நகையை கொண்டு வந்துட்டாங்க. அதற்கு பிறகு தான் டிவிட்டே. ஆனால் ரெக்கவரியில் பாதியை காக்கிகள் பங்கு  போட்டுக் கொண்டாங்களாம். இது புகார் கொடுத்த சிவனின் மனைவிக்கு தெரியவர அவர்,  இந்த விஷயத்தை உயர் போலீஸ் அதிகாரி காதுக்கு கொண்டு சென்றாராம். திருட்டு  நகையை பங்கு போட்ட போலீசார் குறித்து உயர் போலீஸ் அதிகாரி தனது ரகசிய  ‘டீம்’ மூலம் விசாரணை நடத்தி வருகிறாராம். இதில் யார் தலையெல்லாம் உருளப்  போகிறதோ என பங்கு போட்டவர்களுக்கு தற்போது ‘விக்கல்’ எடுத்துக்  கொண்டிருக்கிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘அரசு டிரான்ஸ்பருக்கே டாட்டா காட்டினாராமே பெண் அதிகாரி…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கன்னியாகுமரி  அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை புதிய டீனாக ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டார். அந்த புதிய பணியிடத்திற்கு அவர் வரவில்லை. உத்தரவு  வந்ததும் கூடவே சர்ச்சையும் வந்ததால் அவர், தான் ஏற்கனவே பணியாற்றிய  இடத்திற்கு வர விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். தற்போது மருத்துவ  கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளர் டீன் பொறுப்பாக இருந்து வருகிறார்.  புதிய டீனாக யார் வரப்போகிறார் என்று எதிர்பார்ப்புடன் உள்ளது மருத்துவ  கல்லூரி வட்டாரம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாம்பழ கட்சி எம்எல்ஏ சாஷ்டாங்கமாக யார் காலில் விழுந்து ஆசி பெற்றார்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியும், மாம்பழ கட்சியும் கூட்டணி போட்டதும், அது தோல்வியில் முடிஞ்சதும் ஊரறிஞ்ச கதை. அதுக்கப்புறம் தோல்விக்கான காரணங்கள் குறித்து, ரெண்டு தரப்பும் வார்த்ைத அம்புகளை வீசியது. அதுவெல்லாம் பெரிய சர்ச்சையா மாறினதும், எல்லோருக்கும் தெரிஞ்சது தான். இதில் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன மாம்பழ கட்சி, இனிமேல் இலைகட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஸ்டேட்மென்ட் விட்டுச்சு. ரெண்டு கட்சிக்கும் ஒட்டும், உறவும் இல்லை என்பது தான் லேட்டஸ்ட் நிலவரம். ஆனால், சேலத்துக்காரரின் சொந்த ஊரில் மட்டும், மாம்பழ கட்சிகாரர்கள், மாஜி விஐபியிடம் அவ்வளவு அன்னியோன்யம் காட்டுறாங்களாம். இதில் சிட்டி சார்ந்த எம்எல்ஏ ஒருத்தரு, விசுவாசத்ைத காட்றதுல இறங்கி அடிக்கிறாராம். சமீபத்தில் சேலத்துக்காாரரு, சங்குமலை இருக்கும் ஊரில், கராத்தே அகாடமி ஓபன் பண்ண போனாராம். இதுக்கு மாம்பழ கட்சி எம்எல்ஏவையும் அகாடமிகாரரு அழைச்சிருந்தாராம். பங்ஷனுக்கு வந்த சேலத்துக்காரரை பார்த்ததும், மாம்பழகட்சி எம்எல்ஏ சாஷ்டாங்கமாக காலில் விழுந்தாராம். அத பாத்ததும் சேலத்துகாரரின் முகம் அத்தனை பிரகாசமாகிடுச்சாம். இப்போது இந்த விஷயம், வீடியோவாக லீக்காகி மாம்பழ கட்சி தலைமையின் கவனத்திற்கு போயிருக்காம்…’’ என்றார் விக்கியானந்தா….

The post அழையா விருந்தாளியாக தாமரை கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் இலை கட்சி விஐபி பற்றி சொல்கிறார் wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Challaya ,Leaf Party ,lotus ,Kayya Guest ,Yananda ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...