×

பாரிமுனை கடைகளில் சோதனை 4.65 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: பாரிமுனை, பூக்கடை, யானைக்கவுனி ஆகிய பகுதிகளில் உள்ள ஹார்டுவேர் மற்றும் மெட்டல் கடைகளில் கணக்கில் வராத ஹவாலா  பணம் இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் வருமான  வரித்துறை அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது பூக்கடை நாராயண முதலி தெருவில் உள்ள வினோத்,  என்பவருக்கு சொந்தமான ஹார்டுவேர் கடையில் வருமான வரி துறை அதிகாரி அனுஜ், தலைமையில் 7 பேர் கொண்ட குழு சோதனை செய்தது.  அதில் கணக்கில் வராத ₹2 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்தனர். இதேபோல் யானைக்கவுனி, ஏகாம்பரேஸ்வரர் கோயில் தெருவில் ரத்தன் சந்து என்பவருக்கு சொந்தமான மெட்டல் கடையில் வருமான வரித்துறை  அதிகாரி நாகராஜ், தலைமையில் 4 பேர் கொண்ட குழு சோதனை செய்ததில் கணக்கில் வராத 70 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  மேலும், அதே பகுதியில் ஜெய்சல் ஜெயின் என்பவரின் கடையில் வருமான வரித்துறை அதிகாரி விஜய் தீபன், தலைமையில் 6 பேர் கொண்ட குழு  சோதனை செய்து கணக்கில் வராத 1 கோடியே 95 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்தனர். இந்த சோதனை நேற்று அதிகாலை 4.30 மணிவரை நடைபெற்றது. மொத்தம் மூன்று குழுக்களாக பிரிந்து சோதனை செய்ததில் 4 கோடியே 65 லட்சம்  கணக்கில் வராத ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த பணம் யார் மூலம் இங்கு கொண்டுவரப்பட்டது என வருமான வரித்துறை  அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது….

The post பாரிமுனை கடைகளில் சோதனை 4.65 கோடி ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Barimuna ,CHENNAI ,Parimuna ,Pookadai ,Yanikauni ,Dinakaran ,
× RELATED இசிஆரில் பிறந்தநாளை கொண்டாட போதை...