×

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருடப்பட்ட மினிவேன் ஜிபிஆர்எஸ் மூலம் மீட்பு-ஒடுகத்தூரில் நிறுத்தப்பட்டிருந்தது

ஒடுகத்தூர் : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருட்டு போன மினிவேனை ஜிபிஆர்எஸ் மூலம் ஒடுகத்தூர் சந்தை மேடு பகுதியில் போலீசார் நேற்று மீட்டனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திம்மராயன்(39).  இவர் சொந்தமாக மினிவேன் வைத்துகொண்டு வாடகைக்கு விட்டு வருகிறார். இந்நிலையில், அங்குள்ள பத்திரபதிவு அலுவலகம் அருகே வேனை நிறுத்துவது வழக்கம். இதேபோல், நேற்றுமுன்தினமும் அங்ேகயே வேனை நிறுத்தியுள்ளார். நேற்று அதிகாலை 4 மணியளவில் அங்கு வந்து பார்த்தபோது, வேன் திருடு போனது தெரியவந்தது. உடனடியாக வேனில் பொருத்தப்பட்டிருந்த ஜிபிஆர்எஸ் சிக்னலை சோதனை செய்தபோது, வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பகுதியில் வேன் இருப்பது தெரிந்தது. பின்னர், ஒடுகத்தூர் பகுதியில் உள்ள நண்பர்களுக்கு இதுபற்றி திம்மராயன் தெரிவித்தார்.மேலும், வேப்பங்குப்பம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இன்பரசன் மற்றும் போலீசார் ஒடுகத்தூர் பகுதியில் சோதனை செய்தபோது திருடப்பட்ட மினிவேன் சந்தைமேடு பகுதியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, வேன் உரிமையாளர் திம்மராயன் வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மினிவேனை திருடியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.வேனை விற்க முயற்சிமினிவேனை திருடிய கும்பல் உடனடியாக, வேனின் பக்கவாட்டில் எழுதி இருந்த செல்போன் எண்களை அழித்துள்ளனர். இதனால் வேனுக்கு புதிய வண்ணம் தீட்டி விற்பனை செய்ய முயற்சித்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. வேன் நிறுத்தப்பட்ட இடத்திற்கு சற்று தொலைவில் இருந்தபடியே போலீசார் நீண்ட நேரம் கண்காணித்தனர். ஆனால் வேனை எடுக்க யாரும் வரவில்லை. போலீசார் வருவதை திருட்டு கும்பல் அறிந்திருக்கலாம் அல்லது ஜிபிஆர்எஸ் கருவி இருப்பதை அறிந்து வேனை விட்டு சென்றிருக்கலாம் என தெரிகிறது….

The post கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திருடப்பட்ட மினிவேன் ஜிபிஆர்எஸ் மூலம் மீட்பு-ஒடுகத்தூரில் நிறுத்தப்பட்டிருந்தது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri district ,GPRS ,Odukathur ,Odugathur ,Odugathur Market Medu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அதிகபட்சமாக...