×

தமிழ்நாடு இளைஞர்களை பதற விட்ட வடமாநில கும்பல்: ரயில்வேயில் வேலை என்று ஆசை காட்டி ஏமாற்றிய வடமாநில கும்பல்

டெல்லி: ரயில்வேயில் வேலை என்று ஆசை காட்டி தமிழ்நாட்டை சேர்ந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பட்டம் பெற்ற 28 இளைஞர்களிடம் ரூ 2.67 கோடி வரை பணம் வசூலித்த வாடா மணிலா கும்பல், மோசடியை அரங்கேற்றி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருது நகரை சேர்ந்த முன்னால் ராணுவ வீரரான சுப்புசாமி டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இடம் புகார் அளித்ததை அடுத்து, இந்த மோசடி அம்பலம் ஆகி வெளிவந்துள்ளது. சுப்புசாமி அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்துள்ள டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சுப்புசாமியே வேலை தேடும் இளைஞர்களை மோசடி கும்பலிடம் அழைத்து சென்றது தெரியவந்துள்ளது, ஆனால் இது வேலை வாய்ப்பு மோசடி கும்பல் என்றும், அவர்கள் பின்னணி குறித்து தெரியாது என்று அவர் தெரிவித்துள்ளார். வேலை தேடும் இளைஞர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்கக செயல்பட்டு, தாமும் மோசடி கும்பலிடம்  பணத்தை இழந்து இருப்பதாக சுப்புசாமி கூறியுள்ளார். கோவையை சேர்ந்த சிவராமன் என்பவர் தமக்கு அறிமுகமானது எனவும் அவர் எம்பிக்கள் ஒன்றிய அமைச்சர்கள் இடம் நெருக்கம் என்பதை நம்பி அவரின் ஆலோசனையை ஏற்று செயல்பட்டதாக சுப்புசாமி தெரிவித்துள்ளார். முதலில் மூன்று பெயரை மட்டுமே சிவராமனிடம் அழைத்து சென்றதாகவும், பின்னர் தகவல் பரவி 28 இளைஞர்கள் வரை சுப்புசாமியின் முலம் சிவராமனக்கு அறிமுகம் ஆகி ரயில்வே வேலைக்காக பணம் கொடுத்து ஏமாந்ததாக அவர் தெரிவித்துள்ளார். வேலைக்காக இளைஞர்களை சிவராமன் ஆலோசனை படி டெல்லிக்கு அழைத்து சென்றும் பணம் வசூல் நடைபெற்றுள்ளது டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்ட பல்வேறு ரயில்வே பணிகளுக்காக இரண்டு லட்ச ரூபாய் முதல் 24 லட்ச ரூபாய் வரை படிப்பின் தகுதி பனியின் தன்மைய்க்கு எற்ப லட்சக்கணக்கான ரூபாய்யை வேலை தேடிய இளைஞர்கள் மோசடி கும்பல்யிடம் கொடுத்து இருக்கிறார்கள். டெல்லியில் வடக்கு ரயில்வே துணை இயக்குனர் என்று கூறி விகாஸ் ராணா மற்றும் உதவியாளர் துபே ஆகியோர் அறிமுகமாகியுள்ளார். இவர்கள் ரயில்வே வேலைக்காக பணம் கொடுத்து காத்திருக்கும் இளைஞர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை சரிபார்த்து பயிற்சிக்காக என கூறி டெல்லியில் உள்ள பல்வேறு ரயில்நிலையங்களில், ரயில்களை என்னும் பணியில் ஏற்படுத்தி கொடுத்தது தெரியவந்துள்ளது.ஏமாற்றப்பட்டது தெரியாமல் டெல்லி ரயில்நிலையங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்துறையில் பட்டம் பெற்றவர்கள் என வந்து போகும் ரயில்களையும், ரயில்பெட்டிகளையும், என்னிகொண்டுருந்த பரிதாபம் நிகழ்ந்தது. மோசடி கும்பலுக்கு விகாஸ் ராணா முலையாக செயல்பட்டுவந்துள்ளார். இவர் எந்த ரயில்வே அலுவலகத்திலும் பணம் வசூல் சான்றிதழ் பணி மேற்கொள்ளவில்லை, ரயில் நிலையத்திற்கு வெளியே அவர் மோசடி செய்து அவர் நம்ப வைத்திருக்கிறார்.டெல்லி பொருளாதார குற்றப்பிரிவின்படி போலீஸ் நடத்திய முதல்கட்ட விசாரணையில் இதில் மிகப்பெரிய வேலை வாய்ப்பு மோசடி என்று ஆதாரங்கள் உடன் உறுதியாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். ரயில்வே துறை வேலையை நம்பி மோசடி கும்பலிடம் லட்ச கணக்கான ரூபாய் கொடுத்து ஏமாந்தத்துடன் டெல்லி ரயில்நிலையத்தில்,  தமிழ்நாட்டு இளைஞர்கள் பரிதாபம் அம்பலமாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.           …

The post தமிழ்நாடு இளைஞர்களை பதற விட்ட வடமாநில கும்பல்: ரயில்வேயில் வேலை என்று ஆசை காட்டி ஏமாற்றிய வடமாநில கும்பல் appeared first on Dinakaran.

Tags : Delhi ,Tamil Nadu ,Nadu ,North State Gangs ,State ,
× RELATED பணம் சுருட்டல், கூலி ஆட்களை வைத்து...