×

மீண்டும் காங்.கில் சேர திட்டமா? குலாம் நபி ஆசாத் மறுப்பு

புதுடெல்லி: ‘மீண்டும் காங்கிரசில் சேரும் திட்டம் எதுவும் இல்லை’ என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறினார். முன்னாள் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த குலாம் நபி ஆசாத் காங்கிரசில் முதல்வர் மற்றும் ஒன்றிய அமைச்சராக இருந்துள்ளார்.  கட்சி தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து அவர் விலகி‘ஜனநாயக சுதந்திர கட்சி’ என்ற  கட்சியை தொடங்கியுள்ளார். இந்நிலையில் குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரசில் சேர உள்ளார். அடுத்த மாதம் ராகுல் காந்தி தலைமையிலான இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீர் செல்ல உள்ளது. அப்போது  ஒற்றுமை யாத்திரையில் குலாம் நபி பங்கேற்பார் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், குலாம் நபி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, மீண்டும் காங்கிரசில் சேருவீர்களா என்று  அவரிடம் கேட்டபோது, ‘‘இதில் துளி அளவு கூட உண்மை இல்லை. காங்கிரசில் உள்ள சுயநலமிக்க தலைவர்கள் சிலர் இது போன்ற கட்டுக்கதைகளை கிளப்பி விடுகின்றனர். காங்கிரஸ் தலைவர்கள் யாருடனும் நான் பேசவில்லை. அதே போல் அக்கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் என்னுடன் பேசவில்லை’’ என்றார்.காஷ்மீரில் நடக்கும் ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பங்கேற்பீர்களா என கேட்டபோது,‘‘ அது போன்ற திட்டம் எதுவும் இல்லை’’ என்றார்….

The post மீண்டும் காங்.கில் சேர திட்டமா? குலாம் நபி ஆசாத் மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,Ghulam Nabi Azad ,New Delhi ,Former ,Union Minister ,Congress' ,Ghulam Nabi Azad Denial ,
× RELATED முஸ்லிம்கள் பற்றி பேச வில்லையா?...