×

தீவிரவாத செயல்களுக்காக ரகசிய கூட்டம் கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: ஆவணங்கள், ஆயுதங்கள் சிக்கின

திருவனந்தபுரம்: கேரளாவில் தீவிரவாத செயல்களுக்காக ரகசிய கூட்டம் நடத்தியதாக கிடைத்த தகவலை தொடர்ந்து  தடை செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் அமைப்பின் தலைவர்கள் மற்றும் அவர்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் உட்பட 56 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள இந்த அமைப்பின் தலைவர்கள் பெரும்பாலானோர் கைது செய்து சிறைகளில் அடைக்கப்பட்டனர்.அதைத்தொடர்ந்து இந்த அமைப்புக்கு சொந்தமான வங்கிக் கணக்குகள் அனைத்தும் அதிரடியாக முடக்கப்பட்டன. தலைவர்களின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் சோதனையும் நடத்தப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட தலைவர்கள் யாருக்கும் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அமைப்பின் பெரும்பாலான முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், அடுத்த வரிசையில் உள்ள சில தலைவர்கள் கேரளாவில் பல்வேறு இடங்களில் ரகசிய கூட்டம் நடத்தியதாக தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) தகவல் கிடைத்தது.இந்தக் கூட்டத்தில் இந்தியாவில் முக்கிய இடங்களில் தீவிரவாத செயல்களை அரங்கேற்ற திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து நேற்று அதிகாலை கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், ஆலப்புழா, மலப்புரம், எர்ணாகுளம் உள்பட 56 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனையை  தொடங்கியது. பிஎப்ஐ அமைப்பின் தலைவர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் நடத்தி வரும் நிறுவனங்கள் உள்பட 56 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. நேற்று நடைபெற்ற சோதனையில் இது தொடர்பான பல முக்கிய ஆவணங்களும் என்ஐஏவுக்கு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. துபாய், குவைத், பஹ்ரைன் உள்பட வளைகுடா நாடுகளில் வேறு பெயர்களில் அமைப்புகளை தொடங்கி அந்த அமைப்பின் மூலம் அங்கு பணம் சேகரிக்கப்பட்டு வருவதும் தெரியவந்துள்ளது. சோதனை பல மணி நேரம் நடத்தப்பட்டது. அதிகாலையில் தொடங்கிய சோதனை பிற்பகலுக்கு பின்னர் தான் முடிவடைந்தது. நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் உட்பட 14 ேபரின் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் டிஜிட்டல் ஆவணங்கள் உட்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. என்ஐஏ நடத்திய அதிரடி சோதனையில் கொச்சி எடவனக்காடு பகுதியை சேர்ந்த முபாரக் என்பவரின் வீட்டிலிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து அவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து கொச்சிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.* வெளிநாட்டில் இருந்து பண உதவிதடை செய்யப்பட்ட பின்னரும்  பிஎப்ஐ அமைப்புக்கு வளைகுடா நாடுகளில் இருந்து ஏராளமான அளவில் நிதி உதவி  வருவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 100க்கும் மேற்பட்ட வங்கிக்  கணக்குகளில் பணம் வந்து இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது….

The post தீவிரவாத செயல்களுக்காக ரகசிய கூட்டம் கேரளாவில் 56 இடங்களில் என்ஐஏ அதிரடி சோதனை: ஆவணங்கள், ஆயுதங்கள் சிக்கின appeared first on Dinakaran.

Tags : NIA ,Kerala ,Thiruvananthapuram ,Popular Friend ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...