×

அகில இந்திய குடிமை பணி மையத்தின் மூலம் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு

சென்னை: தமிழ்நாட்டை சார்ந்த ஆர்வலர்களுக்கு அகில இந்திய குடிமை பணி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்படுகிறது. இதுகுறித்து அகில இந்திய குடிமை பணிகள் தேர்வு பயிற்சி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:அகில இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், அகில இந்திய குடிமை பணிகளில் அடங்கிய முதல்நிலை, முதன்மை தேர்வுகளை எதிர்கொள்ளும் ஆர்வலர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் உள்ள, சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, ஏழை, எளிய ஆர்வலர்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. பயிற்சி மையத்தில் செப்டம்பர் 26 முதல் நவம்பர் 28 வரை மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட இந்திய வனப்பணி முதன்மை தேர்விற்காக 9 ஆர்வலர்கள் தங்கி பயின்றார்கள். அவர்களில் 5 ஆர்வலர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 3 ஆர்வலர்கள் மகளிர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்திய வனப்பணி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டை சார்ந்த ஆர்வலர்களுக்கு இப்பயிற்சி மையத்தின் மூலம் மாதிரி ஆளுமை தேர்வு, பணியில் உள்ள, ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமை பணி அலுவலர்களாலும், தலை சிறந்த வல்லுநர்களாலும் நடத்தப்பட உள்ளது.இந்த பயிற்சி மையத்தின் மூலம் தேர்ச்சி பெற்றுள்ள ஆர்வலர்கள் தவிர, மேற்குறித்த வனப்பணி முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டை சார்ந்த பிற ஆர்வலர்களும், இப்பயிற்சி மையத்தில் 02.01.2023 மற்றும் 03.01.2023 அன்று நடைபெறவுள்ள மாதிரி ஆளுமை தேர்வில் பங்கு பெறலாம். அவ்வாறு பங்கு பெற விரும்பும் ஆர்வலர்கள், தங்களது விருப்பத்தினை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நாளைக்குள் அனுப்பலாம். இது தொடர்பான விவரங்களை www.civilserviceindia.com என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அகில இந்திய குடிமை பணி மையத்தின் மூலம் தமிழகத்தை சார்ந்தவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு appeared first on Dinakaran.

Tags : Tamilnadu ,All India Civil Service Center ,CHENNAI ,All India Civic Service Center ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...