×

கல்வி உதவித்தொகை பெற எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு!

பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளின் திறமையான பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கி படிப்பைத் தொடர ஊக்குவிப்பதற்காக நேஷனல் மீன்ஸ் கம் மெரிட் ஸ்காலர்ஷிப் (NMMS) திட்டத்தை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த தகுதி உதவித்தொகை திட்டம் 2008ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது. இந்த தகுதி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெறுவதற்கான திறமையான மாணவர்களைத் தேர்வுசெய்ய ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் ஒரு தேர்வை நடத்துகின்றன. அதன்படி 21.2.2021 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை ( NMMS ) தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளிகள் / அரசு உதவிப் பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, அறிவுரைகளை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்ப அறிவுறுத்தி அரசுத் தேர்வுகள் இயக்குநர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பியுள்ளார். இந்தச் சுற்றறிக்கையின்படி எட்டாம் வகுப்பு படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் 8.1.2021-க்குள் தலைமையாசிரியரின் மூலம் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்….

The post கல்வி உதவித்தொகை பெற எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு NMMS தேர்வு! appeared first on Dinakaran.

Tags : NMMS ,Dinakaran ,
× RELATED ஒளிமயமான வாழ்விற்கு இந்த நாமம்!