×

வருமான வரித்துறை சோதனை மூலமாக பாஜக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பணியை செய்கிறது..! கனிமொழி குற்றசாட்டு

சென்னை: வருமான வரித்துறை சோதனை மூலமாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பணியை பாரதிய ஜனதா கட்சி செய்கிறது என்று கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  கூறினார். இது குறித்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில்; வருமான வரித்துறை சோதனை மூலமாக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பணியை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. வேட்பாளர்களை அச்சுறுத்துவது தேர்தல் வெற்றிக்கான வழி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் உண்மையை அறிந்தவர்கள், இதற்கெல்லாம் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் பயப்படப் போவதில்லை. உண்மை நிச்சயமாக வெளிவரும், அதைத் தாண்டி தேர்தல் வெற்றி என்பது திமுக கூட்டணிக்கு தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்த போது, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் அதனை ஆதரித்து வாக்களித்த அதிமுக. ஆனால், இன்று தேர்தல் வந்துவிட்டது என்பதற்காக மக்களை ஏமாற்றி விடலாம், சிறுபான்மையின மக்களை ஏமாற்றி விடலாம் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்தினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறுகிறது. உண்மையிலே எதிர் கருத்து இருந்தால் எதிர்த்து வாக்களித்து இருக்கலாம். தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்றுவதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்து இருக்கக்கூடிய இயக்கம் திமுக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சி மூலமாக மக்களின் கோரிக்கைகள் மனுக்களை மு.க.ஸ்டாலின் பெற்றிருக்கிறார். அந்தக் கோரிக்கைகளை 100 நாட்களில் நிறைவேற்றித் தருவேன். அதற்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். எல்லாக் கோரிக்கைகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும். எத்தனையோ முறை, திமுக ஆட்சியில் இல்லாதபோது அடக்குமுறைகளை, கைது நடவடிக்கைகளை, அச்சுறுத்தல்களை, வழக்குகளை சந்தித்து இருக்கக்கூடிய இயக்கம்தான் திமுக. உறுதியாக நிற்கக் கூடிய தொண்டர்களைன் கொண்டது திமுக” இவ்வாறு கூறினார்….

The post வருமான வரித்துறை சோதனை மூலமாக பாஜக எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் பணியை செய்கிறது..! கனிமொழி குற்றசாட்டு appeared first on Dinakaran.

Tags : Taxation ,BJP ,Chennai ,Bharatiya Janata Party ,
× RELATED தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை...