கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் சால்டோரா தொகுதி பாஜக வேட்பாளர் சந்தனா பவுரி (30). இவரது கணவர் ஸ்ராபன் தினசரி கூலி தொழிலாளி. தேசிய ஊரக தொழிலாளியான தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் அளித்த பேட்டி: திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சி திட்டமும் செய்யவில்லை. நான் வேட்பாளராக ேதர்வு செய்யப்பட்டதை மார்ச் 8ம் தேதிதான் டிவியை பார்த்து தெரிந்து கொண்டேன். எனது கணவர் ஸ்ராபன், பாஜகவில் சேரும் முன்பாக ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் ஆதரவாளராக இருந்தார். கடந்த 2011ல் திரிணாமுல் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு துன்புறுத்தலை எதிர்கொண்டார். அதனால் எங்கள் குடும்பம் பாஜகவில் சேர்ந்தது. எங்களுக்கு என்று சொந்தமானது என்று பார்த்தால் பாதி முடிக்கப்பட்ட தொகுப்பு வீடு, நான்கு நாற்காலிகள், ஒரு அலுமினிய பெட்டி, ஒரு மேஜை, ஒரு மின்விசிறி, படுக்கைக்கு மரத்தாலான பலகைகள், 3 ஆடு, 3 மாடு ஆகியன உள்ளன. கையில் இருப்பு ரூ. 31 ஆயிரம் உள்ளது. 3 மாடுகளில் ஒரு மாடு என் பெற்றோர் கொடுத்தது. கழிப்பறை வசதி போன்றவை கிடையாது. நான் 11ம் வகுப்பு படிக்கும் ேபாது எனக்கு திருமணம் நடந்தது. நான் 12ம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கும் போது கர்ப்பிணியாக இருந்தேன். தற்போது பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறேன்….
The post 3 ஆடு, 3 மாடு, 3 குழந்தைகள்..மேற்குவங்க பாஜ வேட்பாளரின் சொத்து appeared first on Dinakaran.