×

கருப்பு டி-சர்ட்டில் சந்தைக்குள் நுழைந்த ராகுல்: டெல்லிவாசிகள் உற்சாகம்

புதுடெல்லி: டெல்லியில் உள்ள ராகுல் காந்தி திடீரென நேற்று வசந்த் விஹார் சந்தைக்குள் நுழைந்ததால், டெல்லிவாசிகள் உற்சாகம் அடைந்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் தற்போது ெடல்லியில் உள்ளது. சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் வரும் ஜனவரி 3ம் தேதி முதல் மீண்டும் ராகுலின் நடைபயணம் தொடர்கிறது. இந்நிலையில் நேற்று டெல்லியின் வசந்த் விஹார் சந்தைக்கு திடீரென ராகுல்காந்தி வந்தார். அவர் சந்தைக்குள் இருப்பதை அறிந்த மக்கள், கூட்டமாக அங்கு கூடினர். உடனே அங்கிருந்த சிலர், ராகுலுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். கருப்பு நிற டி-சர்ட் அணிந்திருந்த ராகுல்காந்தி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் நலம் விசாரித்தார். அவரது பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு கூடிய மக்களை அப்புறப்படுத்தினர். இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் வீரேந்திர சவுத்ரி, டெல்லி வசந்த் விஹார் சந்தையில் ராகுல் காந்தி இருக்கும் இரண்டு படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்….

The post கருப்பு டி-சர்ட்டில் சந்தைக்குள் நுழைந்த ராகுல்: டெல்லிவாசிகள் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Rahul ,Delhiites ,New Delhi ,Rahul Gandhi ,Vasant Vihar market ,Delhi ,Congress ,Dinakaran ,
× RELATED ஜனநாயகம், அரசியலமைப்பை காப்பதற்கான...