×

முண்டந்துறை காப்பகத்தில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு: யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை

நெல்லை : நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை முண்டந்துறை புலிகள் காப்பகம் பொட்டல் பகுதியில் மின்சாரம் தாக்கி ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்து உள்ளது. நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் உள்ள மணிமுத்தாறு பொட்டல் பகுதியில் இன்று அதிகாலை மின்சாரம் தாக்கி 40 வயதான ஆண் யானை உயிரிழந்துள்ளது. கல்லிடைக்குறிச்சி அருகே மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ள பொட்டல் கிராமத்தில் அடிக்கடி உணவுக்காக வனவிலங்கள் கீழே இறங்குவது வழக்கமானது. இந்நிலையில், இன்று காலை 5 மணியளவில் காட்டு பகுதியில் உள்ள பனை மரத்தில் பழங்களை பறிப்பதற்காக பனை மரத்தை வேரோடு சாய்த்தது. அப்போது எதிர்பாராத விதமாக பனை மரமானது உயரழுத்த மின்கம்பத்தின் மீது விழுந்ததில் மின்சாரம் பாய்ந்தது. இதனால் சம்பவ இடத்திலேயே யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனால், அப்பகுதியில் யானை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  …

The post முண்டந்துறை காப்பகத்தில் மின்சாரம் தாக்கி யானை உயிரிழப்பு: யானை இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Mundanthurai Sanctuary ,Nellai ,Mundanthurai Tiger Reserve Potel ,Nellai District Western Ghats ,Mundanthurai Reserve ,Dinakaran ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...