×

பீகார் மாநிலம் கயா விமான நிலையத்திற்கு வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா உறுதி: ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.!

பீகார்: பீகார் மாநிலம் கயா விமான நிலையத்திற்கு வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 4 வெளிநாட்டு பயணிகளும் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சீனாவின் உகான் நகரில்தான் முதலில் கொரோனா தோன்றியது. தற்போது சீனாவில் மீண்டும் புதிய வகை கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. இந்தியாவிலும் தொற்று பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய சுகாதார அமைச்சகம் மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது. தொற்று பரவல் அதிகம் இருக்கும் சீனா, ஜப்பான் உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பன்னாட்டு விமான நிலையங்களிலும் நேற்று முன்தினத்தில் இருந்து பரிசோதனை நடத்தப்படுகிறது. இந்தநிலையில், பீகாரில் புத்த கயாவில் 5 வெளிநாட்டுப் பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள 4 பேரில் இருவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். மியான்மாரைச் சேர்ந்த ஒருவரும் தாய்லாந்தை சேர்ந்த ஒருவர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காலச் சக்கர பூஜைக்கு வந்த 32 வெளிநாட்டவர்களுக்கு இருமல் மற்றும் சளி இருப்பது தெரியவந்ததையடுத்து, மாவட்ட நீதிபதி தியாகராஜன் எஸ்.எம். தலைமையில் ஆர்டி-பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 5 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது….

The post பீகார் மாநிலம் கயா விமான நிலையத்திற்கு வந்த 4 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா உறுதி: ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.! appeared first on Dinakaran.

Tags : Corona ,Bihar State Gaya Airport ,Bihar ,
× RELATED KP.2 என்ற புதிய வகை கொரோனாவால்...