×

சரக்கு ரயில் தடம் புரண்டதால் விஷவாயு தாக்கி 51 பேர் சீரியஸ்

செர்பியா: செர்பியாவின் தென்கிழக்கு பகுதியில் ‘அம்மோனியா’ வாயுவை ஏற்றிச் சென்ற சரக்கு ரயில், 20 பெட்டிகளுடன் அண்டை நாடான பல்கேரியாவை நோக்கி சென்றது. அப்போது திடீரென ரயில் தடம் புரண்டது. அதனால் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவால், அப்பகுதியில் வசிக்கும் மக்களில் 51 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து பைரோட் நகரத்தின் மேயர் விளாடன் வாசிக் கூறுகையில், ‘சரக்கு ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்தில், அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. அதனை சுவாசித்த 51 பேர் விஷ வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 60,000 பேர் வசிக்கும் இப்பகுதியில் பலரும் விஷ வாயு தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இப்பகுதியில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரயில் தடம் புரண்டதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை’ என்றார்….

The post சரக்கு ரயில் தடம் புரண்டதால் விஷவாயு தாக்கி 51 பேர் சீரியஸ் appeared first on Dinakaran.

Tags : Serbia ,southeastern ,Bulgaria ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...