×

ஓசூரில் மியவாகி காடுகளை வளர்க்கும் தொண்டு நிறுவனம்

ஓசூர்: ஓசூர் மாநகரை பசும்சோலைவனமாக மற்ற மியவாகி காடுகளை வளர்க்கும் முயற்சியில் தொண்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கு முன்னர் குளிர்ந்த காற்றுடன் இதமான தட்ப வெப்பம் நிலவிய ஓசூரில் மக்கள் தொகை பெருக்கம், தொழில் துறை வளர்ச்சியான காடுகள் பரப்பளவு குறைந்து சீதோஷண நிலை மாறிவிட்டது. புகை, காற்றுமாசு, வெப்பமயமாதலில் இருந்து நகரங்களை காக்க மியவாகி எனப்படும் குறுங்காடுகளை வளர்க்கும் முறை தற்போது பிரபலம் அடைந்து வரும் நிலையில், ஓசூர் இளைஞர்களும் அந்த முயற்ச்சியை விட்டுவைக்கவில்லை. தரிச காட்டுப்பூவே, என்ற அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு ஓசூர் நகர பகுதிகளில், சுமார் 4000 அடியில் மியவாகி காடுகளை அமைத்து வருகின்றனர். ஒவ்வொரு இடத்திலும் குறைந்தபச்சமாக 1000 மரக்கன்றுகளை நடவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அத்தி, நாவல், கொங்கன், பூவரசு, நெல்லி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நாட்டுமர கன்றுகளுக்கும் மேல் நடப்பட்டுள்ளன. பறவைகள் உண்ணும் பழ வகைகள், மூலிகை மரங்களை நடவு செய்து இந்த அமைப்பினர் பராமரித்து வருகின்றனர். பிரிந்தவனம் பகுதியில் 6 மாதங்களுக்கு முன்பு நடப்பட்ட மரக்கன்றுகள் தொடர் மழையால் பச்சை பசேல் என செழித்து வளர்ந்துள்ளன. இதைப்போல ஓசூர் மாநகராட்சி முழுவதும் எண்ணற்ற குறுங்காடுகளை வளர்ப்பதே தங்களின் இலக்கு என கரிசக்காடு பூவே அமைப்பினர் மனம் திறக்கின்றனர். பசும் போர்த்திய சோலை வனமாக ஊரை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன….

The post ஓசூரில் மியவாகி காடுகளை வளர்க்கும் தொண்டு நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Miawaki ,Hosur ,Miavagi Forestry Charity ,Dinakaran ,
× RELATED சிறுமியை துரத்தி துரத்தி கடித்த தெருநாய்கள்