×

தடையை மீறி சாலைகளில் பேனர்: ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் வேப்பேரி ஒய்எம்சிஏ மண்டபத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சாலைகளில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறி பேனர்கள் மற்றும் அதிமுக கொடிகள் மற்றும் தோரணங்கள் கட்டி இருந்தனர். மேலும், ஓ.பன்னீர்செல்வத்தை வரவேற்க வழிநெடுக்க மேளதாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் மகிழன்பன் செய்து இருந்தார். மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு முன்அனுமதி இல்லாமல் வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் கட்சி கொடிகளை அகற்றவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வேப்பேரி உதவி கமிஷனர் அரிக்குமார் உத்தரவுப்படி போலீசார் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் மகிழன்பன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post தடையை மீறி சாலைகளில் பேனர்: ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர் மீது வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : OPS ,Supreme Coordinator ,O. ,District Secretaries ,Panneirselva ,Munthinam Vaperi YMCA Hall ,
× RELATED சொத்து குவிப்பு வழக்குகளிலிருந்து...