×

2 ஆண்டுக்கு பின் மீண்டும் இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர்

லண்டன்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி ஜனவரி 27ம் தேதி புளூம்ஃபோன்டைன் நகரில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் சேர்க்கப்பட்டுள்ளார். முழங்கை காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின்னர் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்கவில்லை. சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் அணிக்கு திரும்பி உள்ளார். அணி விபரம்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹாரி புரூக், சாம் கர்ரன், பென் டக்கெட், டேவிட் மாலன், அடில் ரஷித், ஜேசன் ராய், பில் சால்ட், ஒல்லி ஸ்டோன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ்….

The post 2 ஆண்டுக்கு பின் மீண்டும் இங்கிலாந்து அணியில் ஆர்ச்சர் appeared first on Dinakaran.

Tags : Archer ,England ,London ,England cricket team ,South Africa ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை