×

டிஜிட்டல் ஊடக செயல்பாடுகளை முறைப்படுத்தும் மசோதா வல்லுநர்களிடம் ஒன்றிய அரசு ஆலோசனை செய்ததா?: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி

புதுடெல்லி: டிஜிட்டல் ஊடகங்களின் செயல்பாடுகளை முறைப்படுத்தும் மசோதா குறித்து வல்லூநர்களிடம் ஒன்றிய அரசு ஆலோசனை செய்ததா என்று மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. கேள்வி எழுப்பினார். மக்களவையில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் எழுப்பிய கேள்வி வருமாறு: மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் செயல்பாடுகளை  முறைப்படுத்தும்  சட்ட முன்வரைவிற்கு  ஒன்றிய அரசினால் பரிசீலிக்கப்பட்ட பல்வேறு அம்சங்களின் விவரங்களை தெரியப்படுத்தவும்.மின்னணு மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் செயல்பாடுகளை  முறைப்படுத்துவது தொடர்பாக துறை சார்ந்த மற்றும் சட்ட வல்லுநர்களிடம் அமைச்சகம் ஏதேனும் ஆலோசனை செய்ததா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும். இந்த சட்டமுன்வரைவானது தற்போது நடைமுறையில் உள்ள ‘தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள்-2021’இல் இருந்து மாறுபடுகிறதா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும். டிஜிட்டல் ஊடகங்களின் செயல்பாடுகளை  முறைப்படுத்தும்  சட்டமுன்வரைவானது ஒன்றிய அரசின் கண்காணிப்பு நடைமுறை மூலம் செய்தி இணையதளங்களையும் முறைப்படுத்துகிறதா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும். இந்தியாவில் டிஜிட்டல் ஊடகங்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சகம் ஏதேனும் ஆய்வறிக்கை அல்லது வெள்ளை அறிக்கை தயாரித்துள்ளதா என்றும் அவ்வாறெனில் அதன் விவரங்களை தெரியப்படுத்தவும் என கேட்டுக் கொண்டார். …

The post டிஜிட்டல் ஊடக செயல்பாடுகளை முறைப்படுத்தும் மசோதா வல்லுநர்களிடம் ஒன்றிய அரசு ஆலோசனை செய்ததா?: மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Union government ,Dayanidhi Maran ,Lok Sabha ,New Delhi ,Dayanidhi ,
× RELATED மக்களவை தேர்தல் நடைபெறும் நிலையில்...