×

ஒரு கிலோ தங்க நகைக்கு பதிலாக செம்பு கட்டி கொடுத்து மோசடி: கடை உரிமையாளர் தப்பியோட்டம்

சேலம்: சேலம் செவ்வாய்பேட்டையில், நகைக்கடை நடத்தி வருபவர் லால்டூ. இக்கடைக்கு நேற்று முன்தினம், கேரள மாநிலம் திருச்சூர் ஒல்லூர் சீராச்சியைச் சேர்ந்த ஷேண்டோ வர்கீஸ்(39), திருச்சூர் எழுக்கம்பனியை சேர்ந்த விஷ்ணு(30), நெல்சன் (29) ஆகியோர் வந்து, லால்டூவிடம் ஒரு கிலோ தங்க நகைகளை கொடுத்து, தங்கக்கட்டியாக தருமாறு கேட்டுள்ளனர். அதன்படி, தங்கக்கட்டியை கொடுத்தார். அதை சோதனை செய்த போது அது தங்கக்கட்டி இல்லை, தங்கமுலாம் பூசிய செம்புக்கட்டி என்பது தெரியவந்தது. இதுகுறித்து ஷேண்டோ வர்கீஸ், செவ்வாய்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, லால்டூவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. அவரது கடையின் அருகேயுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவரது நகைக்கடை ஊழியர்களிடமும் விசாரணை நடக்கிறது….

The post ஒரு கிலோ தங்க நகைக்கு பதிலாக செம்பு கட்டி கொடுத்து மோசடி: கடை உரிமையாளர் தப்பியோட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Kerala ,Thiruchur Oallur Cherachi ,
× RELATED கொல்லம்-செகந்திராபாத் சிறப்பு ரயில் இன்று ரத்து