×

அதிமுக எங்களுக்கு தான் சொந்தம்; கட்சி நிதியில் கை வைத்தால் சட்ட நடவடிக்கை பாயும்: ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை

சென்னை: அதிமுக கட்சி நிதியை கையாடல் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை, வேப்பேரியில் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்பு ஓபிஎஸ் நிருபர்களிடம் கூறியதாவது:அதிமுகவில் இப்பொழுது நிலவக்கூடிய இந்த சூழல் யாரால் செயற்கையாக உருவாக்கப்பட்டது. தேர்தலின்போது எம்ஜிஆர், ஜெயலலிதா எப்படி கட்சியை வைத்திருந்தார்களோ, அந்நிலையில் கட்சியை காப்போம். நான் பொருளாளராக இருக்கும்போது அளித்த கணக்கை தான் தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டுள்ளது. உலகத்திலேயே இணைந்து செயல்படக்கூடாது என்று நினைக்கின்ற பிறவி ஒன்று உண்டெனில் அது எடப்பாடி பழனிசாமி தான். தமிழகத்தில் அதிமுக தான் மிகப்பெரிய கட்சி. ஆகவேதான், எங்கள் தலைமையில் கூட்டணி அமையும் என்று நான் பேசி இருக்கிறேன். தேர்தல் ஆணையமும், உச்ச நீதிமன்றமும் சட்டப்படி வழங்குகின்ற தீர்ப்பின்படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்.இவரால் மாவட்ட செயலாளர்களை நியமிக்க முடியுமா என்று கேட்டவர்களுக்கு தற்போது 88 மாவட்ட செயலாளர்களையும், அதிமுக நிர்வாகிகளையும் நியமித்து உள்ளேன். போட்டி பொதுக்குழு என்று எதுவும் இல்லை. பொதுக்குழு நிச்சயமாக நடைபெறும். அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும். அடுத்த நகர்வு பற்றி  இப்போதைக்கு அவசரம் தேவையில்லை. இறுதிகட்ட வெற்றி எங்களுடையது தான். சசிகலாவுடன் உள்பட அதிமுக இயக்கத்தை காப்பாற்றியவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை இணைத்து செயல்படுவோம். கட்சி நிதியை கையாடல் செய்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம். எங்கள் நம்பிக்கை அதிமுகவின் 1.5 கோடி தொண்டர்கள் தான். அவர்கள் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள்.எனக்கு குஜராத்தில் உரிய மரியாதை தரப்பட்டது. முதலில் நான் பின் வரிசையில் அமர்ந்திருந்தேன். பிறகு மேடையில் முன் வரிசையில் என்னை அழைத்து சென்று அமர வைத்தார்கள். அமித்ஷா, ஓபிஎஸ் எங்கே? என்று கேட்டார். பின்பு தான் நான் சென்று அவரை பார்த்து பேசினேன். எங்களுக்கு பாஜ உரிய மரியாதையை தருகிறது. இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது. அது எங்களுக்கு தான் சொந்தம். இவ்வாறு அவர் கூறினார்….

The post அதிமுக எங்களுக்கு தான் சொந்தம்; கட்சி நிதியில் கை வைத்தால் சட்ட நடவடிக்கை பாயும்: ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,O. Panneerselvam ,Chennai ,Veperi ,O. ,Panneerselvam ,Dinakaran ,
× RELATED வெளிச்சந்தையிலிருந்து மின்சாரம்...