×

பீதியை கிளப்பும் BF.7 வைரஸ்!: தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!

சென்னை: விமானங்களில் வரும் வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டால் தனிமைப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். சீனாவில் ஒமிக்ரானின் புதிய திரிபான BF. 7 வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் ஹாங்காங், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் வேகமெடுத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. அதன்படி, குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவருக்கும் பரவியுள்ளது. இதனால், மற்ற மாநிலங்களில் புதிய வகை கொரோனா பரவாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அந்தந்த மாநில அரசுகள் எடுக்கின்றன. அந்த வகையில் தமிழகத்தில் புதிய வகை கொரோனா பரவலை கட்டுப்படுத்து தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் செந்தில்குமார் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையை சார்ந்த அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். தற்போது, புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் வரவுள்ளதால் அதிகம் பயணிகள் தமிழகம் வருவார்கள். விமான பயணிகள் மூலமே தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால், விமான நிலையங்களில் எவ்வாறான சோதனை நடத்தலாம் என்பது குறித்தும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஒரு வேளை அந்த பயணிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்தால் அவர்களை தனிமைப்படுத்தவும் முதல்வர்  அறிவுறுத்தியுள்ளார். சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டு பயணிகளை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. …

The post பீதியை கிளப்பும் BF.7 வைரஸ்!: தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,
× RELATED உலகப் பத்திரிகை சுதந்திர நாளை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!