×

தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்

டெல்லி : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. சீனா மற்றும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாட்டின் மிக பிரபலமான சுற்றுலா தளங்களில் ஒன்றான தாஜ்மஹால், ஆக்ராவில் உள்ளது. ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்வையிட நாடுமுழுவதும், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிக எண்ணிக்கைகளில் வருகை தருவது வழக்கமான ஒன்று. கொரோனா நிலைமையை கருத்தில் கொண்டு தாஜ்மஹாலை பார்வையிட வரும் மக்களுக்கு கொரோனா சோதனை அளிக்க வேண்டும் என்று உத்தரவு அளித்ததை அடுத்து தொற்றுநோய் பரவாமல் தடுப்பு நடவடிக்கை எடுப்பதற்காக முன்னெச்சரிக்கையாக  இந்த சோதனை தொடங்கியுள்ளதகவும். பார்வையாளர்கள் அனைவரும் கட்டயமாக கொரோனா பரிசோதனை உட்படுத்தப்படும் என நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இது தொடர்பாக இரண்டு கட்டங்களாக இந்தியாவில் இருந்து  வெளிநாடுகளில் கொரோனா பரவல்கள் அதிகரித்தது, தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகிறது, இன்றைய தினம் பல்வேறு மாநிலங்களில், அம்மாநில முதலமைச்சர்களின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்ற நிலையில். இன்னும் சற்று நேரத்தி பிரதமர் நரேந்திர மோடி, இதை குறித்து முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட இருக்கிறார்.      …

The post தாஜ்மஹாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் appeared first on Dinakaran.

Tags : Taj Mahal ,Delhi ,China ,Dinakaraan ,
× RELATED தாஜ்மஹால் வழக்கில் உ.பி அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!