×

தேர்தலுக்கு முன்பாகவே பயிர் கடன் ரத்து செய்துள்ளோம்: முதல்வர் எடப்பாடி பேச்சு

புதுக்கோட்டை: தேர்தலுக்கு முன்பாகவே கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடனை ரத்து செய்தது அதிமுக அரசு தான் என விராலிமலையில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் பழனிசாமி பேசினார். தமிழக அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய மு தல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை வந்தார். விராலிமலை செக்போஸ்ட் அருகில் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து அவர் பேசியதாவது: பொதுவாக கடன் ரத்து என்பதை தேர்தல் அறிக்கையில் அரசியல் கட்சி வெளியிடும். ஆனால், தேர்தலுக்கு முன்னதாகவே கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய பயிர் கடன் ரத்து செய்தது அதிமுக அரசுதான். இதுதவிர, கூட்டுறவு வங்கி மற்றும் சங்கங்களில் பெற்ற சுயஉதவிக் குழுக்கடன், 6 பவுன் வரையிலான நகை கடனும் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளோம். ஏப்.1ம் தேதி முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படும். அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் 6 சிலிண்டர், வாசிங் மெஷின், மாதந்தோறும் ரூ.1,500, கல்விக்கடன் ரத்து என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படும். கொரோனா எதிர்ப்பு சக்தியை பெறுவதற்கு குடும்பத்தோடு அனைவரும் இலவச தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். இவ்வாறு முதல்வர் பேசினார்.புதுக்கோட்டை: புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக்தொண்டைமானை ஆதரித்து பேருந்து நிலையத்தில் வேனில் இருந்தபடியே முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், புதுக்கோட்டையின் 100 ஆண்டு கால கனவுத் திட்டம் காவிரி குண்டாறு இணைப்புத் திட்டம் ரூ. 14,400 கோடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் துணை நகரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன என்றார்.திருமயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்….

The post தேர்தலுக்கு முன்பாகவே பயிர் கடன் ரத்து செய்துள்ளோம்: முதல்வர் எடப்பாடி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Edabadi ,Pudukkotta ,Viralimalayas ,
× RELATED தெலங்கானா துணை முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்