×

கள்ளக்காதலியின் கணவர் கொலை: பிசியோதெரபிஸ்ட்டுக்கு இரட்டை ஆயுள்தண்டனை

திருச்சி: நாகர்கோவிலை சேர்ந்தவர் ஜெகன்பாபு(30). இவரது மனைவி அஜிதா(35). இவர் சென்னையில் நர்சாக பணியாற்றினார். இவருக்கும் வேலூரை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஜான் பிரின்ஸ்(35) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. தொடர்ந்து, அஜிதாவும், ஜான் பிரின்சும் சேர்ந்து ஜெகன்பாபுவை தீர்த்து கட்ட திட்டமிட்டனர். இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு அஜிதாவும் ஜான் பிரின்சும் சேர்ந்து ஜெகன்பாபுவை திருச்சிக்கு அழைத்து வந்தனர். நள்ளிரவில் ஜான் பிரின்ஸ், ஜெகன்பாபுவை மது அருந்த முடுக்குப்பட்டி பாலம் அருகே அழைத்து சென்றார். அங்கு ஜான்பிரின்ஸ், ஜெகன்பாபுவை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தண்டவாளத்தின் மீது உடலை வீசி எறிந்து விட்டு சென்றார். இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஜான் பிரின்ஸ் மற்றும் அஜிதாவை கைது செய்தனர். திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில் நீதிபதி பாபு, நேற்று தீர்ப்பளித்தார். குற்றவாளி ஜான் பிரின்சுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அஜிதா இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது….

The post கள்ளக்காதலியின் கணவர் கொலை: பிசியோதெரபிஸ்ட்டுக்கு இரட்டை ஆயுள்தண்டனை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Jaganbabu ,Nagercoil ,Ajitha ,Chennai ,Vellore ,Kallakathali ,
× RELATED திருச்சி விமான நிலையத்தில் போலி...