×

பிற துறைகளின் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த தொழில்முறை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்தானது

சென்னை: கருவூலம் மற்றும் கணக்குத் துறையானது, கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், தலைமை கணக்கு அதிகாரிகள் மற்றும் உதவி கணக்கு அலுவலர்கள் ஆகிய தரத்தில் உள்ள சுமார் 700 அதிகாரிகளை பல்வேறு துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வாரியங்களுக்கு நிதிக் கட்டுப்பாட்டாளர்கள், நிதி ஆலோசகர்கள்/ தலைமை கணக்கு அதிகாரிகளாகப் பணியமர்த்துகிறது. இந்த அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த, தொடர்ச்சியான அறிவு பரிமாற்றம் தேவைப்படுகிறது. டெக்னோ-மேனேஜிரியல் பயிற்சி என்பது அதிகாரிகளின் தொழில்முறை திறன்களை மேம்படுத்துவதற்கு முக்கியமாகும். கருவூலம் மற்றும் கணக்குத் துறை மற்றும் நிதித்துறையில் உள்ள பிற துறைகளின் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கு முதன்மையான தொழில்முறை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மிகவும் உதவியாக இருக்கும். இது தொடர்பாக, நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன், முன்னிலையில், கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையர் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் செயலர் ஆகியோருக்கு இடையே தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்நிகழ்ச்சியில், நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம், ஆணையர் கே.விஜேயந்திர பாண்டியன், இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் செயலாளர் டாக்டர் சி.எ.ஜெய்குமார் பத்ரா, நிதி மற்றும் கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் உயர் அதிகாரிகள் மற்றும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்….

The post பிற துறைகளின் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த தொழில்முறை அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் கையெழுத்தானது appeared first on Dinakaran.

Tags : Minister Palanivel Thiagarajan ,CHENNAI ,Treasury and Accounts Department ,Dinakaran ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...