×

வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய வாலிபரிடம் ₹2 லட்சம் கேட்டு செல்போனில் கொலை மிரட்டல்-பிரபல ரவுடி, கூட்டாளி கைது

புதுச்சேரி :  புதுச்சேரி, சாரம், பிள்ளைத்தோட்டம், கங்கையம்மன்  கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஷேக் முகமது பாஷில் (29). ஏமன் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது தந்தையின் நண்பரான ரவி  மகன் ஜேனியல் அகசிக்கு ஷேக் முகமது பாஷில் ஏமன் நாட்டில் வேலை வாங்கி  கொடுத்தாராம். 2 வருடங்களாக அங்கு ஜேனியல் அகசி வேலை செய்யும் நிலையில்,  நண்பர் ஷேக் முகமதுவுடன் ஏற்பட்ட சில பிரச்னைகள் காரணமாக சில மாதங்கள்  பிரிந்து வேறு வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், தற்போது சமாதானமாகிவிட்டதாக  கூறப்படுகிறது. இதனிடையே ஷேக் முகமது புதுச்சேரி வந்துள்ள  நிலையில், மேற்கண்ட விவகாரத்தை அறிந்து கொண்ட அவரது நண்பரான வாணரப்பேட்டை,  காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த காளி என்ற காளியப்பன் (33) நேற்று  முன்தினம் இரவு ஷேக் முகமதுவுக்கு போன் செய்துள்ளார். அப்போது மேற்கண்ட  பிரச்னைகள் குறித்து அவரிடம் பேசிய, காளி, ஷேக்  முகமதுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம். அப்போது இத்தகவலை தன்னிடம்  கூறியது யார்? என்று ஷேக் முகமது, காளியப்பனிடம் கேட்டபோது லாஸ்பேட்டை,  முத்துலிங்கம்பேட், மாரியம்மன் கோயில் தெருவில் வசிக்கும் பிரபல ரவுடியான  மணிகண்டன் என்ற சுத்தி மணி (32) என்று கூறவே அதிர்ச்சியடைந்தார். பின்னர்  அதிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் ரூ.2 லட்சம் தர வேண்டுமென கூறவே,  இணைப்பை துண்டித்துவிட்டு காவலர் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு  இத்தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து இத்தகவல் சம்பவம் நடந்த  காவல்சரக பகுதியான உருளையன்பேட்டை ஸ்டேஷனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.  இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாபுஜி உத்தரவின்பேரில் போலீசார் ஷேக் முகமது  வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது காளியப்பனிடம் இருந்து  தன்னிடம் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவலை அவர் ரெக்கார்டு  செய்திருந்த நிலையில் ஆதாரத்தை போலீசிடம் ஒப்படைத்தார். அதை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர் நகர பகுதியில்  பதுங்கியிருந்த காளியப்பன் மற்றும் ரவுடி சுத்திமணி இருவரையும் நேற்று  அதிரடியாக கைது செய்த போலீசார் காவல் நிலையம் அழைத்துவந்து  விசாரித்தனர். பின்னர் அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி  காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இதில் ரவுடி மணிகண்டன் என்ற சுத்தி மணி  மீது 4 கொலை வழக்கும், காளியப்பன் மீது வெடிகுண்டு உள்ளிட்ட வழக்கும்  நிலுவையில் உள்ளது….

The post வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய வாலிபரிடம் ₹2 லட்சம் கேட்டு செல்போனில் கொலை மிரட்டல்-பிரபல ரவுடி, கூட்டாளி கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Sheikh Mohammad Bashill ,Gangayamman Temple Street ,Saram ,Philathitottam ,Yemen ,Dinakaran ,
× RELATED பெங்களூரு, நாமக்கல் அலுவலகங்களில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது