×

கொட்டி தீர்த்த கனமழையால் தண்ணீரில் வீடுகள்… கண்ணீரில் மக்கள்

ஆலந்தூர்: மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதியில் கொட்டி தீர்த்த கனமழையால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் கண்ணீரில் மக்கள் தவிக்கின்றனர். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாளாக கனமழை பெய்ததால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. தெரு, சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால்  மக்கள் தவிக்கின்றனர். ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை மற்றும் பட்ரோடு பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். குறிப்பாக, ஆலந்தூர் மாதவபெருமாள் கிழக்கு மற்றும் மேற்கு தெருக்களில் உள்ள சாலைகளில் முட்டியளவு தண்ணீர் தேங்கியது. வீடுகளையும் மழை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் மக்கள் தவிக்கின்றனர். மழைநீருடன் சாக்கடையும் கலந்துவிட்டதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டுக்கு உட்பட்ட சிட்டிபாபு தெரு, கம்பர் தெருக்கள் மற்றும் வீடுகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் அப்பகுதி மக்கள் வெளியேற முடியாமல் தவிக்கின்றனர். அம்பேத்நகர், கக்கன் நகர் மற்றும் மடிப்பாக்கம் தெற்கு ராம்நகர், புழுதிவாக்கம், வடக்கு ராம்நகர் பகுதிகளில் உள்ள வீடுகளிலும் மழைநீர் புகுந்துள்ளதால் அப்பகுதி மக்கள் வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். இதனால் பால், தண்ணீர் உள்பட அத்திவாசிய பொருட்கள் வாங்க கூட சிரமப்படுகின்றனர்.இதுபற்றி மக்கள் கூறுகையில்,’’ ஆதம்பாக்கம், மடிப்பாக்கம் பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் வெளியேற முடியாமல் தவிக்கிறோம்.அதிகாரிகள் யாரும் பார்க்கவரவில்லை’ என்றனர்….

The post கொட்டி தீர்த்த கனமழையால் தண்ணீரில் வீடுகள்… கண்ணீரில் மக்கள் appeared first on Dinakaran.

Tags : ALANTHUR ,Madipakkam ,Adambakkam ,Chennai ,
× RELATED ஆதம்பாக்கம் பகுதியில் குண்டும் குழியுமான சாலை: சீரமைக்க கோரிக்கை