×

நானும் வேட்பாளர் தாங்க…குக்கர் கட்சியினர் லக… லக…

தமிழகத்தில் கோடை வெயிலுக்கு நிகராக, தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் தங்களையும், சின்னத்தையும் பிரபலப்படுத்த, பல்வேறு கட்ட முயற்சிகளில் ஈடுபட்டு வராங்க. முரசு கட்சியுடன் கூட்டணி அறிவிச்ச குக்கர்காரரும், தங்களோட வேட்பாளர்கள அறிவிச்சிருக்காரு. ஆனா இதுல பெரும்பாலானோர் யாரு, எங்க இருக்காங்கனு யாருக்குமே தெரியலையாம். இதனால நானும் வேட்பாளர் தான்னு விளம்பரப்படுத்த வேண்டிய கட்டாயத்துல இருக்காங்க. நடிகர் வடிவேல் ஒரு படத்துல நானும் ரவுடிதான்னு, வான்டடா போயி போலீஸ் ஜீப்ல ஏறுவாரு. அதுமாதிரியே மாங்கனி மாவட்ட குக்கர் வேட்பாளர் ஒருத்தரு, தன்னை தானே விளம்பரப்படுத்திட்டு இருக்காராம்.அந்த மாநகர வடக்கு தொகுதியில போட்டியிடும் குக்கர் கட்சி வேட்பாளரு, கூட்டணியில இருக்கும் முரசு கட்சிக்காரங்க 2 பேரோட, வேட்புமனு தாக்கல் செய்ய வந்தாரு. அதேநேரத்துல ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செஞ்சிட்டு, முக்கிய கட்சி வேட்பாளர் ஒருத்தரு வெளியே வந்தாரு. திடீர்னு அவருகிட்ட போன குக்கர் வேட்பாளரு, நானும் ஒரு வேட்பாளர் தாங்க, உங்கள எதிர்த்து நானும் போட்டியிடுறனு சொல்லிட்டு, வாழ்த்துக்கள் சொல்லிட்டு போயிருக்காரு. இத கேட்டு அந்த வேட்பாளர், என்னடா இது இந்த தொகுதிக்கு வந்த சோதனைன்னு நொந்துகிட்டு போனாராம்….

The post நானும் வேட்பாளர் தாங்க…குக்கர் கட்சியினர் லக… லக… appeared first on Dinakaran.

Tags : Cooker Party Laka ,Tamil Nadu ,Laka ,
× RELATED பொதுமக்களின் ஏகோபித்த ஆதரவையும்,...