×

பாரம்பரிய இந்திய மருத்துவமுறைக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு: தெலங்கானா ஆளுநர் பெருமிதம்

சென்னை: பாரம்பரிய இந்திய மருத்துவமுறை ஆராய்ச்சிக்கு உலக அளவில், நல்ல வரவேற்பு உள்ளது என புதுச்சேரி  துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் தெரிவித்துள்ளார். வருங்கால தலைமுறையினருக்கு ஆயுர்வேத மருத்துவ தொழில்நுட்பம் என்ற நோக்கத்துடன் இந்திய மருத்துவ முறை நிறுவனம், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் இணைந்து 2 நாள் மாநாட்டை நடத்தின. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இந்திய மருத்துவமுறை மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் என 800க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். மாநாட்டையொட்டி அரிய மருத்துவ மூலிகைகள் கொண்ட 54 அரங்குகள் இடம்பெற்றன. மாநாடு நிறைவு விழா எஸ்ஆர்எம்கல்லூரியில் அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சி எஸ்ஆர்எம் வேந்தர் பாரிவேந்தர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பாரம்பரிய மருத்துவத்தை சிறப்பாக அளித்துவரும் டாக்டர் சதீஷ்குமாருக்கு ஆரியபட்டா விருதினை வழங்கினார். பின்னர், அவர் பேசுகையில் : இந்திய மருத்துவ முறையில் ஆயுர்வேதம் மருத்துவமுறை முக்கிய இடத்தை பெற்றுள்ளது. மருத்துவம் சம்மந்தமாக தற்போது நமது மனநிலையில் மாற்றம் உருவாக்கியுள்ளது, இந்திய மருத்துவமுறை மக்களிடையே ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இந்திய மருத்துவமுறை சிகிச்சை மேற்கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.ஆயுர்வேத உள்ளிட்ட பாரம்பரிய இந்திய மருத்துவமுறை ஆராய்ச்சி பணிகள் உலக அளவில் நல்ல வரவேற்பு பெற்று முன்னணியில் இருந்து  வருகிறது. துளசி, வில்வம் போன்ற இலைகள் மருத்துவ குணம் கொண்டது. இன்றைக்கும் படுக்க இலவம் பஞ்சு மெத்தை, சமைக்க மன்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது இவை உடலுக்கு ஆரோக்கியமானது.’’ என்று தெரிவித்தார்….

The post பாரம்பரிய இந்திய மருத்துவமுறைக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு: தெலங்கானா ஆளுநர் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Governor Purumitham ,Chennai ,Puducherry ,Deputy Governor ,Telangana Governor Perumitham ,
× RELATED தெலுங்கானா விபத்து: சாலையோரம் நின்ற...